பிரேம்ஜியை கலாய்த்த SJ சூர்யா.. சிம்புவிற்கு இதெல்லாம் ஒரு மேட்டரா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான மாநாடு படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்புவின் கம்பேக் படமாக அமைந்த மாநாடு படம் வெளியான 3 நாட்களில் சுமார் 22 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி மாநாடு படத்தின் வெற்றிக்கு தனது அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு தங்க செயின் வழங்குமாறு நகைச்சுவையாக சிம்புவிடம் டிவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படம் மிகப்பெரிய வெற்றது. எனவே நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவை நேரில் சந்தித்து தங்க செயினை பரிசாக அளித்ததாக மீடியாக்களில் செய்தி வெளியானது.

Simbu-Cinemapettai-1.jpg
Simbu-Cinemapettai-1.jpg

இந்நிலையில் இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரேம்ஜி நடிகர் சிம்புவை டேக் செய்து, “மை டியர் தலைவா என் அண்ணன் வெங்கட் பிரபு அட்ரஸ் அனுப்பவா” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கேலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த டிவிட்டர் பதிவை ரீ டிவிட் செய்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிரிப்பது போன்ற ஸ்மைலிகளை பதிவிட்டுள்ளார். மாநாடு படம் மட்டுமல்ல படக்குழுவினரும் மிகவும் ஜாலியாக உள்ளனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது. இப்போவே இப்படினா ஷூட்டிங் ஸ்பாட்ல என்னென்ன அலப்பறைகள் நடந்திருக்குமோ?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்