விஜயை வளர்த்த பிரபலத்தை ஒதுக்கிய எஸ்.ஏ.சி.. கேட்காமல் உதவி செய்த ரஜினி.!

சினிமாவில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் ஆக இருக்க அனைவருக்கும் ஆசை வரும். அது தற்போது தமிழ் சினிமாவை பொறுத்த வரை பேச்சு அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரை வைத்து பணம் சம்பாதிக்கும் தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

30 வருடத்திற்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ள ரஜினிகாந்த் இன்று வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருவது இந்தியாவிலேயே எங்கும் கிடையாது. இதை உடைக்க பல நாயகர்கள் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை இப்போது விஜய் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்வதால் இந்த பேச்சு மறுபடியும் எழுந்துள்ளது. ஆனால் இதைப்பற்றி அனுபவம் நிறைந்த சினிமாவைப் பற்றி தெரிந்த பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எப்படி ரஜினிக்கு பொருந்தி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Also Read : எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்

கலைஞானம் சினிமாவில் முக்கியமான பன்முகத் திறமை கொண்ட கலைஞர் இவர் பல கலைஞர்களை உருவாக்கிய இருக்கிறார் அதில் ரஜினியும் ஒருவர். இவரிடம் எஸ்.ஏ.சி ஒரு காலத்தில் தன் மகனை விஜயை வளர்க்க உதவி கேட்டுக் இருக்கிறார். இவரும் தனக்கு தெரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இவரே கதையும் எழுதி எல்லாம் விஜய்க்காக கொடுத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் விஜய் பெரிய ஹீரோவாக வளர்ந்து விட்டார் அந்த சமயத்தில் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டார். அப்போது விஜய் அப்பாவிடம் சென்று உங்கள் மகன் நிறைய வீடுகளை வாடகைக்கு விடுகிறார் தனக்கும் உரிமை பெற்றுத் தருமாறு கேட்டு இருக்கிறார். அதற்கு SAC என் மகனிடம் நான் பேச முடியாது அவன் எது சொன்னாலும் கேட்க மாட்டான் மன்னியுங்கள் என்னால் எந்த உதவி செய்ய முடியும் என்று முகத்தில் அடித்தது கூறிவிட்டார்.

Also Read : வீட்டை விட்டு துரத்திய விஜய், இப்படி ஒரு நிலை உங்களுக்கு வராமலா போகும்… சாபம் விட்ட தயாரிப்பாளர்

இவர் வருத்தப்பட்டு கொண்டே யாரிடம் சொல்லாமல் இருந்து வந்தார் இவர் ரஜினியையும் ஹீரோவாக அறிமுகப்படுத்த பல உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால் ரஜினியிடம் இவர் சென்று எதையும் கேட்கவில்லை இதை அறிந்த ரஜினி தானாக முன்வந்து இவரை கேட்காமலேயே இவருக்கு ஒரு வீடு வாங்கி அவரிடம் கொடுத்து இது உங்கள் வீடு நீங்கள் ஆயுள் இருக்கும் வரை இங்கேயே இருக்க வேண்டும். யாரிடமும் கையேந்த கூடாது என அவரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

இதைப்பற்றி கலைஞானம் சொன்னது விஜய் வளர்ந்தபிறகு மறந்துவிட்டார் விஜய் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் ஆனால் மிக முக்கியமாக மிக நல்ல மனிதர் அதனால் அவருக்கு அந்தப் பட்டம் தானாகவே முப்பது வருடத்துக்குமேல் இருந்து வருகிறது. ரசிகர்களும் விடாமல் அவருக்கு துணையாக இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது நடித்தால் வசூல் செய்தால் மட்டும் போதாது தன்னை வளர்த்தவர்களையும், ரசிகர்களையும் மதிக்க தெரியவேண்டும். அதனால்தான் ரஜினி இன்று வரை நம்பர் ஒன் இடத்தில் அனைவர் மனதிலும் இருந்து வருகிறார் என்று கலைஞானம் கூறியிருக்கிறார்.

Also Read : ஆடியோ லான்ச்சுக்கு பொருத்தமில்லாமல் வந்த விஜய்.. பரபரப்பை கிளப்பிய இசையமைப்பாளரின் தடாலடி பேச்சு

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -