ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் டால்பி தியேட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் நாமினேட் செய்யப்பட்டதால், ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தது.

இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கி உள்ளது. இதை அடுத்து ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 

Also Read: என்னோட படத்துல இவரை நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை.. ராஜமவுலி விரும்பிய அந்த தமிழ் நடிகர்

எப்படியாவது ஆர் ஆர்ஆர் படத்திற்கு ஏதாவது ஒரு ஆஸ்கர் விருதை வாங்கி விட வேண்டும் என பல மாதங்களாக அமெரிக்காவிலேயே குடிகொண்டிருந்த படத்தின் இயக்குனர் ராஜமவுலி நினைத்ததை முடித்துக் காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸும் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளனர். இப்போது இருவரும் அதே பாடலுக்காக ஆஸ்கார் விருதையும் பெற்று இந்திய திரையுலகையே கெத்து காட்ட வைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து ஏஆர் ரஹ்மானும் அதை அடுத்து தற்போது இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

Also Read: பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வாங்கி குவித்த பிரபலங்கள்.. ஆஸ்கரைத் தொடர்ந்து மாஸ் காட்டும் ஆர்ஆர்ஆர்

கடந்த ஆண்டு பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்ததெல்லாம் பத்தாது என்று, ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என ராஜமவுலியின் வெறித்தனமான முயற்சி நிறைவேறிவிட்டது. 

மேலும் இந்த படத்தில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்களுக்கும் இந்த படத்தின் இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினர்களுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: ரஜினியின் 25 வருட சாதனையை முறியடிக்க போராடிய திரையுலகம்.. ஒருவழியாக முறியடித்த ராஜமவுலி

- Advertisement -

Trending News