மின்னல் விண்ணைப் பிளக்க நீரில் அதிரடி காட்டும் ஜூனியர் என்டிஆர்.. மிரட்டும் ராஜமௌலியின் RRR பட புதிய போஸ்டர்

RRR-movie
RRR-movie

தமிழில் சங்கர் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைசியாக பாகுபலி படங்களுக்கு சுமார் 250 கோடி பட்ஜெட் செலவு செய்தார்.

ஆனால் வசூல் 1600 கோடிகளுக்கு மேல் குவிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் (அல்லூரி சீதா ராம ராஜு) மற்றும் ஜூனியர் என்டிஆர் (கொமாரம் பீம்) ஆகிய கதாபாத்திரத்தில் இருவரையும் வைத்து கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், அஜய் தேவ்கான் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ஹாலிவுட் நடிகை அலிசா டுடி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் RRR படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கடந்த ஜனவரி 8 வெளியாக வேண்டிய திரைப்படம் எதிர்பாராத சூழ்நிலையில் படப்பிடிப்புகள் தள்ளிச் சென்றுவிட்டது.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் ராஜமௌலி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை.

இன்று ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படக்குழுவினர் அவருடைய கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

JrNTR-RRR-Movie
JrNTR-RRR-Movie
Advertisement Amazon Prime Banner