விஜய் பட வசூலை விட ராஜமவுலியின் RRR பட டிஜிட்டல் உரிமத்தின் விலை அதிகம்.. மிரள விடுறாங்கப்பா!

தெலுங்கு சினிமாவில் இதுவரை தோல்வி கொடுக்காத இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார் ராஜமவுலி. ராஜமௌலி எடுத்த படங்கள் அனைத்துமே தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பாகுபலி படங்களின் வெற்றி மூலம் உலகமெங்கும் அறியப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR).

கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்தில் நாயகர்களாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

நாயகியாக அலியா பட், முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் என படம் முழுக்க பிரம்மாண்டம் நிறைந்திருக்கிறது. இறுதிக் கட்டத்தில் இருக்கும் RRR படத்தின் ரிலீஸ் தேதி முதலில் அக்டோபர் 13 எனக் குறிக்கப்பட்டது. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் படம் அடுத்த பொங்கலுக்கு தான் என்கிறார்கள் RRR பட வட்டாரங்கள்.

RRR-digitalrights-price
RRR-digitalrights-price

ஆனால் அதற்கு முன்னரே படத்தின் பிசினஸ் வேலைகளை தொடங்கி விட்டனர். இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது RRR திரைப்படம். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் ஜீ நிறுவனத்திற்கு 325 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

RRR-ZEE5-cinemapettai
RRR-ZEE5-cinemapettai

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜீத் போன்றோரின் படங்களின் வசூல் கூட இந்த அளவுக்கு வந்தது இல்லை என்பதே அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்