ரிலீஸ்க்கு முன்னாடியே அதிர்ச்சி அளித்த ஆர்ஆர்ஆர் படம்.. பதறிப்போய் ராஜமவுலி வைத்த கோரிக்கை

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆர் ஆர் ஆர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதும் வெளியாக இருந்தது.

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஆர்ஆர்ஆர் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆனால் ஆர்ஆர்ஆர் படம் பலமுறை தள்ளிப் போனதால் 150 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த பண நெருக்கடியில் உள்ளது. இதை ஈடுகட்டுவதற்ககு கதாநாயகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நினைத்தால் மட்டுமே சரிக்கட்ட முடியும்.

ஆர்ஆர்ஆர் படத்தின் பொருட்செலவில் இவர்களின் சம்பளம் பெரிய பங்கு வகிக்கிறது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் 100 கோடிக்கு மேல் ஆர்ஆர்ஆர் படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டு பாதி சம்பளத்தை இப்போது பெற்றுக்கொண்டு, மீதி சம்பளத்தை படத்தின் வெளியீட்டுக்கு பிறகு பெற்றுக்கொள்ளுமாறு படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படம் தற்போது பண நெருக்கடி உள்ளதால் திரையரங்குகள் 100 சதவீத இறுக்கைகளுடன் உள்ளபோது படம் வெளியானால் பண நெருக்கடியில் இருந்து தப்பித்து வசூலை வாரிக்குவிக்க வாய்ப்பு உள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை