சந்திரமுகி கிளைமாக்சை மிஞ்சிய ரோஜா சீரியல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சன் டிவி தொடர்களில் அதிக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ரோஜா. இத்தொடரில் பிரியங்கா நல்கார், சிபி சூரியன், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்.

இத்தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கர் ரோஜாவாக நடிக்கிறார். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத ரோஜா தொடரில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. டைகர் மாணிக்கம், செண்பகத்தின் உண்மையான வாரிசு ரோஜா தான் என்பதை நிரூபிப்பதற்காக அர்ஜுன் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக செண்பகத்திற்கும், ரோஜாவுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக காரில் செல்கிறார்கள். அப்போது இத்தொடரின் வில்லி அனு, ரோஜா தான் உண்மையான வாரிசு என்று தெரிந்தால் தான் மாட்டிக் கொள்வோம் என எண்ணி கொலை செய்ய திட்டம் திட்டுகிறார்.

அதை அறிந்த அர்ஜுன், ரோஜா இறந்தது போன்று நடிக்க வேண்டுமென்று ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ரோஜா மீது கொலைவெறியில் இருந்த அனு ரோஜாவை துப்பாக்கியால் சுடுகிறார். துப்பாக்கியில் அர்ஜுன் தோட்டாவை மாற்றி வைத்ததால் ரோஜா உயிர் தப்பினார்.

ஆனால் அந்த காட்சியில் ரோஜா இறந்ததுபோல் அனுவை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே இறந்த ஒரு பெண்ணின் உடலைக் கொண்டு வருகிறார்கள். அந்தப் பெண்ணின் உடலை ரோஜா என்று நம்ப வைப்பதற்காக ஒரு மாஸ்க் எடுத்து வந்து நடு ரோட்டிலேயே அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

இதைப் பார்த்த ரோஜா தொடர் ரசிகர்கள் என்னதான் நவீன உலகம் என்றாலும் நடு ரோட்டிலேயே அறுவை சிகிச்சை செய்ய முடியுமா, இதை பார்த்து விஞ்ஞானமே ஆச்சரியப்படும் என கலாய்த்து வருகிறார்கள். எம்ஜிஆர் காலத்தில் மரு வைத்தாலே மாறுவேஷம் என்பதை விட இந்த காட்சி மிகவும் மோசமாக உள்ளது என நெடிசைன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சந்திரமுகி கிளைமாக்ஸில் எப்படி ஜோதிகாவை நம்ப  வைப்பதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும், அதேபோல் ரோஜா சீரியல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானது மட்டுமில்லாமல் மரணமாக கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்