27 லட்சத்தை கமுக்கமாக ஆட்டைய போட போகும் ரோகிணி.. முத்து கண்ணில் மண்ணைத் தூவி விஜயாவுக்கு போட்ட நாமம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி கூட கூட்டு சேர்ந்து விஜயா மீனாவின் பூக்கடையை காலி பண்ணி விட்டார். இதனால் சோகத்தில் கண்ணீர் கம்பளமாய் இருந்த மீனாவுக்கு முத்து ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்.

ஆனாலும் தொடர்ந்து விஜயா, மினாவை அவமானப்படுத்தி வீட்டு வேலைக்கு தான் நீ லாய்க்கு என்று அசிங்கப்படுத்தி விட்டார். இதை தட்டி கேட்ட முத்துவிடம் மற்ற மருமகள் ரெண்டு பேரும் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து கொடுக்கிறார்கள். ஆனால் உன் மனைவி சும்மா வீட்ல வெட்டியா தானே இருக்கா என்று குதர்க்கமாக பேசிவிட்டார்.

உடனே மீனா, நீங்க சொல்றது சரிதான் நான் கடைசி வரை இந்த வீட்டு வேலையை மட்டும் தான் செய்யணும் என்று இருக்கு போல. அதனால நானே எல்லா வேலையும் பார்க்கிறேன் என்று மறுபடியும் அடுப்பங்கரையில் சமைக்க போய்விட்டார்.

இதையெல்லாம் பார்த்த முத்து, மீனாவின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு பைக்கை வாங்கி கொடுக்கப் போகிறார்.

அந்த பைக்கை வைத்துக்கொண்டு வாடிக்கையாளரான கஸ்டமர்களிடம் நேரடியாக பூ கொடுத்து சம்பாதிக்கட்டும் என்று சர்ப்ரைஸ் ஆக வீட்டிற்கு பைக் வாங்கிட்டு வருகிறார். பிறகு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு போன் பண்ணி கீழே வாங்க என்று முத்து கூப்பிடுகிறார். அதே மாதிரி மீனாவுக்கும் போன் போட்டு கீழே வர சொல்கிறார்.

பிறகு பைக்கை கொடுத்து இனி உன்னை யாராலும் தடுக்க முடியாது. உன் இஷ்டப்படி வேலையை இந்த பைக் மூலமாக நிறைவேற்றிக் கொள் என்று அனைவரது முன்னாடியும் மீனாவை கவுரவப்படுத்திவிட்டார். இதனை பார்த்த விஜயா மற்றும் ரோகினிக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை.

மனோஜ் குடும்பத்தை தொடர்ந்து ஏமாற்றி வரும் ரோகினி

இருந்தபோதிலும் ரோகிணி, இவர்களுக்கு எதிராக தானும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று குறுக்கு புத்தியில் யோசிக்கிறார். அந்த வகையில் மனோஜிடம் காணாமல் போன 27 லட்சத்தை பற்றி கேட்கிறார். உடனே மக்கு மனோஜ் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார்.

பிறகு ரோகிணி அவருடைய குறுக்கு புத்தியை பயன்படுத்தி யார் திருடனா என்பதை கண்டுபிடித்து பணத்தை அபகரித்து விடலாம் என்று முயற்சி எடுக்கிறார். இதன் மூலம் ரோகினிக்கு அந்த 27 லட்ச ரூபாய் கிடைத்துவிடும். ஆனால் இதை வீட்டிற்கு தெரியாமல் கமுக்கமாக வைத்து மனோஜ் மற்றும் ரோகினி வாழ்க்கையில் செட்டில் ஆகுவதற்கு பிளான் பண்ணப் போகிறார்.

வழக்கம் போல் ரோகிணி செய்கிற தில்லாலங்கடி வேலை யாருக்கும் தெரியப்போவதில்லை. அத்துடன் விஜயா மற்றும் முத்து கண்ணில் மண்ணைத் தூவி அவர்களுக்கு பெரிய நாமத்தை போட போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்