விக்னேஷ் சிவனின் ராக்கி படம் தேறுமா? தேறாதா? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனம்

தேசிய விருது இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் வசந்த் ரவியின் இரண்டாவது படமாக இன்று வெளியாகியுள்ள படம் தான் ராக்கி. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது வாங்கிய வசந்த் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

rocky-movie-twitter-review
rocky-movie-twitter-review

காரணம் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ராக்கி படத்தில் வசந்த் ரவி மட்டுமின்றி இயக்குனர் இமயம் பாரதிராஜா, ரவீனா ரவி மற்றும் ரோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுதவிர லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தின் புரமோஷன் பாடலான காலம் ஒரு துரோகி என்ற டைட்டில் பாடலில் தோன்றியுள்ளார்.

rocky-movie-twitter-review
rocky-movie-twitter-review

ரா சினிமாஸ் மற்றும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ராக்கி படத்தில் நடிகர்கள் யாரையும் குறை கூற முடியாது. அவர் அவர் பணியை திறம்பட செய்துள்ளார்கள். அதிலும் நாயகன் வசந்த் ரவி அவரின் அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மீண்டும் ஒரு பெரிய கைத்தட்டல் வாங்கியுள்ளார்.

rocky-movie-twitter-review
rocky-movie-twitter-review

இப்படம் மூலம் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பும் படத்தில் பரவலாக பாராட்டை பெற்று வருகிறது. ஒட்டு மொத்தமாக ராக்கி படத்திற்கு தற்போது வரை கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

rocky-movie-twitter-review
rocky-movie-twitter-review

இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் பாசிடிவ் கமெண்டகளையே தட்டி விட்டுள்ளனர். இருப்பினும் இன்று ஒரு நாள் போனால் தான் படத்தின் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும். ஆனால் படக்குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

rocky-movie-twitter-review
rocky-movie-twitter-review
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்