ராக்கி பட நடிகருக்கு இப்படி ஒரு பேக்ரவுண்ட் இருக்க.. அசந்து பார்க்கும் கோலிவுட்

தமிழ் சினிமாவில் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி. இப்படத்தில் இவருடன் ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்திருந்தனர். வசந்த் ரவி தரமணி படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதை பெற்றார்.

இப்படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி படத்தில் நடித்துள்ளார். ஆர் ஏ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து வெளியிட்டுள்ளனர்.

வழக்கமான பழிவாங்கல் கதையை வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கும் படம் ராக்கி. இப்படத்தில் ராக்கி ஆக வசந்த் ரவி நடித்துள்ளார். தரமணி படத்திற்குப் பிறகு வித்தியாசமான கதையை தேடிக்கொண்டிருந்த வசந்தி ரவிக்கு இப்படம் சிறப்பாக அமைந்துள்ளது.

வசந்த் ரவிக்கு தரமணி படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி கழித்து ராக்கி படம் வெளியாகியுள்ளது. ஆனால் இனி வசந்த்ரவியின் படங்கள் வரிசையாக வர இருக்கிறதாம். வசந்த் ரவி நான்கு, ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காதல் படங்கள் மற்றும் இருண்ட படங்களிலும் நடித்து வருகிறாராம்.

வசந்த் ரவியின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். தற்போது இவருக்கு 33 வயதாகிறது. நிஜத்தில் வசந்த் ஒரு மருத்துவர். ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்து விட்டு அப்போலோவில் வேலை பார்த்தார்.

ஆரம்பத்தில் வசந்த் சினிமாவில் நடிப்பது அவரது வீட்டுக்கு தெரியாதாம். வேலை பார்க்கும் போதே லீவ் போட்டுவிட்டு நடிப்பு கிளாசுக்கு போவாராம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகு வீட்டில் சொன்னாராம். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும், தீவிர கண்கள் கொண்ட தாடி மனிதன் வசந்த் ரவியின் திரைப்படங்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை