வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

எலும்பும், தோலுமாய் மாறிய ரோபோ சங்கர், காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த மனைவி!

விஜய் டிவிக்கு சென்றால் எப்படியும் பிரபலமாகிவிடலாம் என்று பலர் காத்து கிடக்கிறார்கள். ஏனென்றால் விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் வெள்ளி திரைக்கு சென்று சாதித்துள்ளனர். அந்த வகையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து விஸ்வாசம், வேலைக்காரன், இரும்புத்திரை போன்ற பல படங்களில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். இப்போதும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

Also Read : நாங்களே அன்றாடம் காட்சி இவ்வளவு பைன் போட்டா எப்படி சார்.? பாசத்தை தொலைத்து கதறும் ரோபோ சங்கர்

சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதி இன்றி கிளிகள் வளர்த்ததால் 5 லட்சம் அபராதம் அவரது குடும்பத்திற்கு போடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கர், எலும்பும் தோலுமாக இருந்த புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

அதாவது ரோபோ சங்கர் சற்று பருமனான உடல்வாகு உடையவர். அவரது மனைவி, மகள் என எல்லோருமே சற்று குண்டாக தான் இருப்பார்கள். ரோபோ சங்கர் உடலில் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்று இணையத்தில் பல செய்திகள் உலாவ தொடங்கியது.

Also Read : பஞ்சத்துல அடிபட்ட மாதிரி மாறிய ரோபோ சங்கர்.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே

அதாவது ரோபோ ஷங்கருக்கு அரிய வகை நோய் உள்ளதால் இவ்வாறு உடல் எடை அதிகப்படியாக குறைந்துள்ளார் என்று சிலரும், அதிகப்படியான மதுப்பழக்கத்தின் காரணமாக உடல் மெலிந்துள்ளார் என்று சிலரும் கூறி வந்தனர். இதுகுறித்து ரோபோ சங்கரின் மனைவி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். எனது கணவரைப் பற்றி பொய்யான தகவல்கள் நிறைய இணையத்தில் வெளியாகி வருகிறது.

இப்போது நடித்து வரும் ஒரு படத்திற்காக தான் உடல் எடையை குறைத்துள்ளார். அவரது உடலில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் ரோபோ சங்கரின் உண்மையான ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து கவலை கொள்ள வேண்டாம், படத்திற்காக மட்டுமே உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து உள்ளார் என ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா கூறியுள்ளார்.

Also Read : விஜய் டிவி புகழ், பாலா செய்த அட்டகாசத்தால்.. சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்

- Advertisement -

Trending News