மகள் கல்யாணத்தில் காசு பார்த்த ரோபோ சங்கர்.. பொழைக்க தெரிஞ்ச குடும்பம்

Robo Shankar: வாயுள்ள பிள்ளை பொழச்சிக்கும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. ரோபோ சங்கர் குடும்பத்துக்கு இது சரியாக இருக்கும். புருஷன் பொண்டாட்டி பொண்ணு என மூன்று பேரும் வாய்ஜாலம் காட்டியே பிரபலமாகிட்டாங்க.

ஒரு பக்கம் ரோபோ சங்கர் விஜய் டிவி மூலமா சினிமால முகம் தெரியும் அளவுக்கு பட வாய்ப்புகள் அடிக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் அதே விஜய் டிவி ரோபோ ஷங்கரின் மனைவிக்கும் வாய்ப்பு கொடுத்து இப்ப அவங்க நிறைய யூட்யூப் சேனல்ல நடிச்சிட்டு இருக்காங்க.

பொண்ணு இந்திரஜா டிக் டாக்ல சாதாரணமாக நடிக்க ஆரம்பித்து இப்பொழுது படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு கட்டத்துல ரோபோ சங்கர் உடம்பு சரியில்லாமல் வீட்ல உட்கார வேண்டிய நிலைமை வந்துச்சு.

அப்போ பிரியங்கா ரோபோ சங்கர், இந்திராஜா ரோபோ ஷங்கர் தான் தங்களுடைய பிரபலத்தை பயன்படுத்தி இன்டர்வியூகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் சம்பாதிக்க ஆரம்பித்தது.

நல்ல குடும்பம் என்ற பெயர் வாங்கிய இவர்கள் கடந்த சில மாதங்களாகவே மக்களிடம் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார்கள். கொஞ்சம் ஓவர் கிரிஞ்சாக இவங்க பண்றதுதான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்லப்படுது.

சமீபத்துல ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜாவுக்கு கல்யாணம் ஆனது. ஏன் இந்த வயசிலேயே கல்யாணம், ஏன் இவ்வளவு ஆட்டம் பாட்டத்தோட கல்யாணம், இதெல்லாமா வீடியோ போடுவாங்க, எதுக்குப்பா இந்த விளம்பரம் ஏகப்பட்ட விமர்சனங்கள் அந்த குடும்பத்தின் மீது.

அடேங்கப்பா கவரேஜ் செலவு மட்டும் இவ்வளவா!

இந்திரஜா நிச்சயதார்த்தம் நடைபெற்றது முதல் பிரபல யூட்யூப் நிறுவனம் அவங்க வீட்ட குத்தகைக்கு எடுத்துட்டாங்க போல. கல்யாணத்துக்கு முன்னாடி நலங்கு பங்க்ஷன், ஹால்டி, மண்டபத்துக்கு கிளம்புறது, கல்யாணம், மருவீடு, விருந்து சாப்பாடு, கிப்ட் பிரிச்சு பார்க்கறதுன்னு எல்லாமே வீடியோ தான்.

இதுக்கெல்லாம் சேர்த்து மொத்தம் அந்த யூட்யூப் சேனல் ரோபோ ஷங்கருக்கு 15 லட்சம் கொடுத்திருக்கிறது. எப்படியும் கல்யாணத்திற்கு 20 லிருந்து 30 லட்சம் செலவு பண்ணி இருப்பாங்கன்னு வச்சுக்கிட்டாலும், இப்போ அதுல 15 லட்சம் லாபம் பார்த்தாச்சு.

இதுல தனியா ரோபோ ஷங்கர் பொண்ணு உங்கள் பாண்டியம்மான்னு ஒரு யூடியூப் சேனலும் ஆரம்பிச்சு இருக்காங்க. இனி அதுல கப்புள்ஸ் வீடியோஸ் போட்டு இன்னும் லாபத்தை அள்ளிடுவாங்க.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்