இரட்டை அர்த்த வசனங்களை பேசிய ரோபோ ஷங்கர்.. கேட்டு கேட்டு ரசித்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் ரோபோ ஷங்கர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து ரோபோ சங்கர் பல படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர். அதன் பிறகு பெரிய பெரிய முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தார். அதுவும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் காமெடியனாக நடித்து ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

தற்போது ரோபோ ஷங்கர் ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள சின்ரெல்லா படம் இன்று வெளியாகியுள்ளது இதற்காக பிரஸ்மீட்டில் ரோபோ ஷங்கர் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி வெளிப்படையாக பேசினார்.

raai laxmi cindrella

மேலும் இப்படத்தில் ராய் லட்சுமி யுடன் நான் நடித்த ஒரு காட்சி இருக்கிறது அதில் இரட்டை அர்த்தமுள்ள வசனத்தை பேசுவேன் மற்ற நடிகைகளாக இருந்தால் கோபப்பட்டு இந்த காட்சி வேண்டாம் வசனம் வேண்டாம் என கூறுவார்கள் ஆனால் நான் பேசியதை ராய்லட்சுமி ரசித்துக் கேட்டார் மேலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் எனக் கூறினார்.

மேலும் மெழுகு சிலை போல் ராய்லட்சுமி இருக்கிறார் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது என அனைவரின் முன்னிலையில் ரோபோ சங்கர் தெரிவித்தார். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் அதுவும் ராய் லட்சுமி நடிப்பில் பெரிய அளவில் பேசப்படும் என தெரிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்