Indraja Wedding: ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, கார்த்திக் திருமணம் நேற்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இவர்களுடைய நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் திருமண சடங்குகள் ஒவ்வொன்றும் படுவேகமாக நடந்து வந்தது.
இந்திரஜா, கார்த்திக் திருமணம்

அதையடுத்து தற்போது இந்திரஜா தன் தாய் மாமனை கரம் பிடித்துள்ளார். அந்த போட்டோக்கள் தான் இப்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கண்ணீர் மல்க தாலியை வாங்கிக் கொண்ட இந்திரஜா

அதிலும் தாலி கட்டும் போது அவர் கண்ணீர் மல்க அதை ஏற்றுக்கொண்டது பார்ப்பதற்கு க்யூட்டாக இருந்தது. மேலும் சூரி, விமல், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
ரோபோ சங்கர் மகள் திருமணம்

இப்படி தன் மகள் கல்யாணத்தை ரோபோ சங்கர் ஆடம்பரமாக நடத்தி முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரை பிரபலங்களுக்காக சென்னையில் ரிசப்ஷனும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
பிகில் பாண்டியம்மா

இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அந்த வகையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ள பிகில் பாண்டியம்மாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.