கேதர் ஜாதவுக்கு பதிலாக 35 வயது வீரரை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. கொலைவெறியில் ரசிகர்கள்!

ஊர் உலகமே தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்கும் நிலைமைக்கு இருக்கிறது டீம் செலக்சன். 35 வயதை தாண்டிவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் உண்டு எனவும் கிண்டல் செய்கின்றனர். அதற்கு காரணம் கேதர் ஜாதவுக்கு பதிலாக மீண்டும் 35 வயது வீரரை சென்னை அணி பணம் கொடுத்து வாங்கியுள்ளது தான்.

சூதாட்டத்தில் சிக்கி 2 வருடம் தடையிலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிறகு மீண்டு வந்து அந்த வருடமே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதற்கு அடுத்த வருடம் இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் துபாயில் நடைபெற்ற கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சொதப்பியதால் பிளே ஆஃப் கூட செல்ல முடியாமல் பாதியிலேயே நடையை கட்டியது.

அதற்கு காரணம் மற்ற அணியில் உள்ள இளம் வீரர்கள் சமீபகாலமாக கிரிக்கெட் ஆடியதும், சென்னை அணியில் ரிட்டையர்ட் ஆன வீரர்கள் கிரிக்கெட் ஆடாததும் தான் காரணம் என குறிப்பிட்டனர். முக்கியமாக சென்னை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. ஐபிஎல் அணிகளுக்கு முன்னுதாரணமாக இருந்த சென்னை அணி சமீபகாலமாக தடுமாறி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தோனியின் கேப்டன்சிப் மங்கி விட்டதாகவும், ஆட் தேர்வுகள் சரி இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் 2021 ஆண்டுக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் பல அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களை தேர்வு செய்து கொண்டு மற்ற வீரர்களை அணியை விட்டு நீக்கியது.

அந்த வகையில் சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த கேதார் ஜாதவ், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், முரளி விஜய், மோணு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை நீங்கியது. சரி, இந்த முறை இளம் வீரர்களை தேர்வு செய்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. ராபின் உத்தப்பாவுக்கு வயது 35 ஆகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ராபின் உத்தப்பா கடந்த ஆறு வருடமாக சரியாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு கேதர் ஜாதவ் பரவாயில்லை என்கிற அளவுக்கு கருத்துகளும் மற்றும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

robin-uthappa-joins-csk-ipl2021
robin-uthappa-joins-csk-ipl2021