சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சிம்பு வாய்ப்பை தட்டிப்பறித்த ஆர் ஜே பாலாஜி.. சைலண்டா வேலைய பார்த்துட்டாரு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகர் ஆர் ஜே பாலாஜி, அதன்பிறகு சூர்யாவின் எல்கேஜி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பிறகு நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’, அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு நடிப்பதாக இருந்த ஒரு படத்தின் பட வாய்ப்பை ஆர் ஜே பாலாஜி சைலண்டாக கைப்பற்றியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே சிம்பு சங்கரின் மகள் அதிதியுடன் இணைந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக ஒப்பந்தமானது.

ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. சிம்புவும் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, அதன் பிறகு கிருஷ்ணன் இயக்கும் ‘பத்து தல’ என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்தார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இன்னிலையில் சிம்புவின் தந்தை டி ஆர் ராஜேந்தர் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்காக தனது தந்தையுடன் சிம்பு கிளம்பியிருக்கிறார்.

சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை மாதத்தில் திரும்பும் சிம்பு, ஜூலை 18-ஆம் தேதி ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார். ‘கொரோனா குமார்’ படம் டிராப் ஆனது, தயாரிப்பு நிறுவனம் புதிய இயக்குனரை தேடிக்கொண்டிருக்கிறது என தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த சிம்பு படத்தின் கதை பிடிக்காததால் நடிக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆர் ஜே பாலாஜியிடம் கதையை கூறி இயக்குனர் சரி செய்து விட்டாராம். சிம்பு மறுத்த அதே கதையில் தற்போது ஆர் ஜே பாலாஜி ஒப்புக்கொண்டதால் தலைப்பை மட்டும் மாற்றி உள்ளனர். இந்த படத்தின் தலைப்பு ‘சிங்கப்பூர்’ என்று வைத்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News