சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஹாட்ரிக் கொண்டாட்டத்தில் ஆர் ஜே பாலாஜி.. போனி கபூர் என்ன கொடுத்துருக்காரு பாருங்க

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிபெறுவது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுத்து வெற்றி பெற்று வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் தன்னுடைய கலகலப்பான பேச்சினால் அனைவரையும் கவரக் கூடியவர்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான எல்கேஜி படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்திருந்தார். இப்படத்தில் தன்னுடைய நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கைகளை பற்றி மக்களுக்கு புரிய வைத்தார்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் வீட்ல விசேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி அடித்ததால் ஆர் ஜே பாலாஜி உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையில் வீட்ல விசேஷம் படக்குழுவுக்கு ஆர் ஜே பாலாஜி பரிசுகளை வாரி வழங்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுலுக்கு விலை உயர்ந்த வாட்சை பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி தன்னுடன் இணைந்து படத்தை இயக்கிய சரவணனுக்கு தங்கச்சங்கிலி மற்றும் உதவி இயக்குனருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுகளை வாரி வழங்கி உள்ளார். இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தும் படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு பரிசு வழங்கியுள்ளார்.

RJ-Balaji-gifts-reward-to-veetla-vishesham-team

சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றியால் கமலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கோடி மதிப்பிலான காரையும், 13 உதவி இயக்குனர்களுக்கு பைக் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சையும் பரிசாக கொடுத்து இருந்தார்.

- Advertisement -

Trending News