முதல் முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ரிது வர்மா.. இணையத்தில் செம வைரல்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வசூல் பெற்றது.

மேலும் இந்த படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பவருக்கு இதுதான் முதல் திரைப்படம். இந்த படத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பெரிதும் இம்ப்ரஸ் செய்துவிட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

இதனால் அடுத்த ரஜினி படத்தை இவர் தான் இயக்குவார் என்ற தகவலும் கோலிவுட் வட்டாரங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை என அவரே தெரிவித்து விட்டார்.

ரிது வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு முன்பே கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் என்ற படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் கிட்டத்தட்ட 5 வருட காலமாக கிடப்பில் கிடக்கிறது. இன்னமும் மொத்த படப்பிடிப்பும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

தமிழில் எப்படியோ, ஆனால் தெலுங்கில் ரிது வர்மாவின் மார்க்கெட் நன்றாகவே உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரிது வர்மா.

Ritu Varma-cinemapettai
Ritu Varma-cinemapettai