ரித்து குழந்தை அப்படி என்னதான் சொல்லிச்சு.? புது சர்ச்சையை கிளப்பிய சமூக வலைத்தளம்!

கோவையை சேர்ந்த அந்த குட்டி பையனின் பெயர் ரித்து என்ற ரித்விக். யூடியூபில் கலக்கும் குட்டி ரித்துவிற்கு ஒரு குட்டி யூடியூப் சேனலும் இருக்கிறது. ரித்து ராக்ஸ் என்ற பெயரில் உள்ளது தான் அந்த யூடியூப் சேனல்.

கோவிட்19 தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் ஏற்பட்டது ஒரே நாளில் பிரபலம் அடையும் அளவிற்கு என்ன செய்தார் என்று யோசிக்க நமக்கு ஆச்சரியத்தை தருகிறது ரித்வின் வீடியோகள்.

முதலில் பாடல் பாடி வெளியிட்ட வீடியோவால் பெருமளவு வரவேற்பு இல்லாத நிலையில் பெற்றோர்கள் புதுவிதமான concept யோசித்து கலக்கின்றனர். செய்தியாளர் வீடியோவில் ரித்வின் கெட்டப் சேஞ்ச் இருக்கு, பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இதில் பெண் வேடமிட்டு மேலும் மூன்று கதாபாத்திரங்களும் அவர் நடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் டைலர் கதாபாத்திரத்தை பலர் விமர்சித்துள்ளனர் குழந்தைக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.

பேண்டில் ஜிப் வைத்த கான்செப்ட் பேசும் பாஷை ஒரு தரப்பை குறிப்பிட்டிருப்பதால் சோசியல் மீடியாவில் இதைப்பற்றிய சர்ச்சை கிளம்பியுள்ளது. சாதாரண பேச்சு வழக்கு தான் அந்த குழந்தை பேசி இருப்பது போன்று ஒரு சிலர் ஆதரவாக தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சீனை எப்படி சொல்லிக் கொடுத்தீங்க என்று கேட்டும் உள்ளனர். அந்த வீடியோவில் ஒரு சில தவறான வசனங்கள் வருவதாகவும் அதனை எப்படி குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று பெற்றோர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

rithu
rithu

Next Story

- Advertisement -