வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிளஸ் 2 தேர்வுக்காக டெஸ்ட் தொடரில் இருந்து விலகல்.. லைம் லைட்டிற்கு வந்த பின்னும் படிப்பா?

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பிளஸ் 2 தேர்வு காரணமாக பிரபல வீராங்கனை விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்றே மகளிர் அணியும் தொடர்ந்து ஜொலித்து வருகிறது. இருப்பினும், சமீபத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாரா விதமாக தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் வீராங்கனைகள் அறிக்கப்பட்ட நிலையில், நட்சத்திர வீராங்கனையாக ரிச்சா கோஷிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. முன்னணி வீராங்கனையான ரிச்சாவுகு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியடைந்து, கேள்வி எழுப்பி வந்தனர்.

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் வீராங்கனை

இந்த நிலையில் ரிச்சா கோஷ் ஏன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்ற வெளியாகியுள்ளது. அதன்படி, 21 வயதாகும் அவர் தற்போதுதான் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத இருப்பதால் இத்தொடரில் விளையாடவில்லை என கூறப்படுகிறது. ஏதேனும் ஒரு துறையில் நுழைந்துவிட்டாலே போதும் இனிமேல் படிக்க தேவையில்லை, புகழ் வெளிச்சமும், சம்பளமும் கிடைக்கிறதே என இருக்காமல் நட்சத்திர வீராங்கனையாக இந்திய அணியில் இருந்தபோதிலும் பிளஸ் 2 தேர்வை எழுதவிருக்கும் ரிச்சா கோஷிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது பெரும்பாலான இளைஞர்கள், மாணவர்களின் கனவாக இருக்கும் நிலையில், தனது 15 வயதில் இந்திய அணியில் அறிமுகமானர் ரிச்சா கோஷ். திறமையின் மூலம் அணியில் இடம்பிடித்து சர்வதேச தொடரிலும் அதிரடி காட்டி நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்து வருகிறார். இவர், இதுவரை 1 ஒரு நாள் தொடர்,. 3 டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.

அதேபோல் 19 வயதிற்குட்பட்டோருக்கான டி 20 தொடரிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். தற்போது 21 வயதான ரிச்சா கோஷ் 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 2 அரைசதங்களுடன் 151 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிக ஸ்கோர் 96 ரன்கள் ஆகும். இதுவரை 59 டி 20 போட்டிகளில் விளையாடிய அவர் 1 அரைசதத்துடன் 879 ரன்கள் அடித்துள்ளார். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வருகிறார்.

வளரும் வீராங்கனையாக இவர், வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஹர்மன்ப்ரீத் கவு தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஹேமலதா யஸ்திகா, உமா சேத்ரி, சயாலி சத்கரே, அருந்ததி ரெடி, தேஜல் ஹெசப்னிஸ், ரேணுகா சிங், பிரிய மிஸ்ரா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் இடம்பிடித்திருந்தார். ஆனால் ரிச்சா கோஷின் பெயர் இடம்பெறாததைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

படிப்பின் மீதான அக்கறை

இந்த நிலையில், பிளஸ் தேர்வு எழுதவுள்ளதால்தான் ரிச்சா கோஷ் இத்தொடரில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். அதேசமயம், வாழ்க்கையில் முன்னேறி திறமையான வீரராக திகழும்போது மறக்காமல் படிப்பின் மீது அக்கறை காட்டி வருவதும், தவறாமல் தேர்வு எழுதவிருக்கும் ரிச்சா கோஷை புழ்ந்து வருவதுடன், அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் கூறி வருகின்றனர். தேர்வு எழுதி முடித்த பின் அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

Trending News