என்னை நிறைய பேர் ஏமாற்றினார்கள்.. ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் ரேவதி

தமிழ் சினிமாவில் ரேவதி நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. ஒரு காலத்தில் ரேவதிக்கு இணையாக எந்த நடிகையும் இல்லை. அந்த அளவிற்கு தனக்கான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு ரேவதிக்கு பட வாய்ப்புகள் குறைய அதன் பிறகு சினிமாவை விட்டு விலகினார். மேலும் ஒருசில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் தவிர்த்து வந்தார். இதனால் சினிமாவில் ரேவதி பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.

சமீபத்தில் ரேவதி தன் வாழ்க்கை நடந்த அனுபவங்களையும், துன்பங்களையும் வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது இவர் சிறு வயதிலேயே படத்தில் நடிக்க வந்துள்ளார். அதன்பிறகு 20 வயதிலேயே திருமணமும் செய்து கொண்டார். பின்பு வாழ்க்கை இனிமையாக அமையும் என எதிர்பார்த்த ரேவதிக்கு நினைத்தபடி வாழ்க்கை அமையவில்லை.

சில வருடங்களுக்கு பிறகு இருவருமே விவாகரத்து பெறுவதாக கூறிவிட்டு பிரிந்தனர். அதன் பிறகு ரேவதி மனதளவில் பெரிதும் பாதித்ததாகக் கூறினார். மேலும் இந்த பிரிவில் இருந்த தாங்க முடியாமல் சில வருடங்கள் வேதனைபட்டதாகவும் தெரிவித்தார்.

Revathi

பின்பு சினிமாவிலும் நிலையாக நடிக்க முடியவில்லை நிறைய ஏமாற்றம், வாழ்க்கையிலும் சந்தோசம் இல்லை எனக் கூறினார். அதன் பிறகு ரேவதி சிலகாலம் அரசியலில் ஈடுபட்டதாகவும் அதிலும் நிறைய பேர் என்னை ஏமாற்றினார்கள் என பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்