சூட்டிங் முன்பே ஹீரோயினுடன் ரிஹர்சல் பார்க்கும் நடிகர்.. அப்பதான் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகுமாம்

பொதுவாக ஹீரோ, ஹீரோயின்கள் இருவரும் படப்பிடிப்பில் மட்டும் தான் ஆரம்ப காலங்களில் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது உள்ள ட்ரெண்டே மொத்தமாக மாறிவிட்டது. சமீபத்தில் தான் பெரிய நடிகர் ஒருவர் தன் படத்தில் நடித்த ஹீரோயின் உடன் வெளிநாடு சென்று இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இப்போது அதே பாணியை பின்பற்றி இருக்கிறார் மற்றொரு நடிகர். சர்ச்சைக்கு பேர் போன நடிகர் சமீபகாலமாக தொட்டதெல்லாம் பொன்னாகி வருகிறது. தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்த நிலையில் நடுவில் ஒரு பிரேக் எடுத்திருந்தார். அதுவும் அடுத்த படத்திற்காக தன்னை தயார் செய்து கொள்வதற்காகத்தான் இந்த பிரேக்.

Also Read : எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு நடிகையை நேக்காக கழட்டிவிட்ட ஆக்சன் ஹீரோ.. கல்யாணத்துக்கே வேட்டுவைத்த நடிகை

புதிய படத்திற்காக பல கலைகளை நடிகர் கற்று இருக்கிறார். அவரது தோற்றமும் இப்போது முழுக்க வித்யாசமாக இருக்கிறது. இந்த சூழலில் நடிகர் இப்போது வரை சிங்கிளாக உள்ள நிலையில் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் விரைவில் அவருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக ஏறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகரின் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்று இருக்கிறார். நடிகையும் ஹீரோ கேட்டுக் கொண்டதற்காக அவருடன் சென்றிருக்கிறாராம். இது என்ன புது கூத்தாக இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏனென்றால் ஏற்கனவே நடிகர் வாழ்க்கையில் பல காதல் தோல்விகள் இருந்துள்ளது. இப்போது புதிய நடிகையுடன் வெளிநாடு சென்றுள்ளதால் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் தான் இருக்கிறது. இதனால் என்னென்ன பிரச்சனைகளை நடிகர் சந்திக்க இருக்கிறாரோ என அவரது குடும்பம் வருத்தத்தில் இருக்கிறதாம்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -