12 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கும் இளம் நடிகை.. ஐஸ்வர்யா ராஜேஷ் ராசி இவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் பலரும் ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் இளம் நடிகை ஒருவர் 12 வயது குழந்தைக்கு தாயாக நடித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் காக்கா முட்டை. சாதாரண திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது.

இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 24 வயது தான் ஆகி இருக்கும். மிகவும் இளம் வயதில் தாய் கதாபாத்திரத்தில் நடித்தால் பின்னர் அந்த நடிகைகள் படவாய்ப்புகள் வராது என்ற பழைய கால டெக்னிக்கை உடைத்தெறிந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அதே உத்தியை கையில் எடுத்துள்ளார் ரெஜினா கெஸன்ட்ரா. விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா நடிக்கும் முகிழ் என்ற படத்தில் விஜய்சேதுபதி மகளுக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியின் மகளுக்கு 12 வயது ஆகிறதாம். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஓரளவு கவனிக்கப்படும் நாயகியாக வலம் வரும் ரெஜினா கெஸன்ட்ரா, எதுக்கு இந்த விஷப்பரிட்சை எடுத்துள்ளார்? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

regina-cinemapettai
regina-cinemapettai

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் முகிழ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்