லெஸ்பியனாக நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.. பகீர் கிளப்பிய ரெஜினா கெஸன்ட்ரா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ரெஜினா கெஸன்ட்ரா ஓரினச்சேர்க்கை பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்படி ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரெஜினா கெஸன்ட்ரா. பக்கா சென்னை பொண்ணு. ஆரம்பத்தில் நினைத்தபடி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறினார்.

ஆனால் தற்போது தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ரெஜினா கஸன்ட்ரா நடிப்பில் தமிழில் மட்டுமே கிட்டதட்ட ஐந்து படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக பரபரப்பை கிளப்பியுள்ளார். லெஸ்பியன் என்றால் ஓரினச்சேர்க்கை என்று பொருள். அப்படி நடித்த அனுபவத்தை சொல்ல வார்த்தையே இல்லை எனும் அளவுக்கு புகழ்ந்து பேசியுள்ளார்.

regina-cinemapettai
regina-cinemapettai

லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து விட்டு பெருமை வேறயா என்று கேட்டால், எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் ரெஜினா சரியாக நடித்துக் கொடுப்பார் என்ற பெயர் எடுக்க வேண்டுமென விரும்புகிறாராம்.

பின்னாளில் திரும்பிப் பார்க்கும்போது ரெஜினா என்ற ஒரு திறமையான நடிகை இருந்தார் என ஊர் சொல்ல வேண்டுமாம். அதற்கு இப்படிப்பட்ட கதாப்பாத்திரத்திலா நடிப்பது? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்