ஆஹா ஜெயிலர் வசூலுக்கு வச்சாங்க பாரு ஆப்பு.. ஓவர் அக்கப்போரால் ரெட் ஜெயண்ட் எடுத்த முடிவு 

Jailer Movie: அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. நெல்சன் திலீப் குமார்- ரஜினி கூட்டணியால் இந்த படத்திற்கு பெரிதும் வரவேற்பு இருக்கிறது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அடுத்ததாக  படத்தை தியேட்டரில் ரணகளம் செய்ய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்பொழுதுமே ரஜினி படங்கள் என்றால் பட்டாசு வெடிக்க, ஆரவாரம் தெறிக்க ரிலீஸ் ஆகும்.

Also Read: 72 வயதில் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்?. ஏழு வருடத்தில் 70 படங்கள் நடித்த சாதனை

இந்த முறை அப்படித்தான். ஆனால்  இப்பொழுது இந்த படத்தின்  வசூலுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் ஓவர் அழுச்சாட்டியதால் இப்போது படத்தை டிஸ்ட்ரிபியூட் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு பங்கம் ஏற்படும் வகையில் அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.

 ஒவ்வொரு முறையும் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் செய்யும் அக்கப்போரால் பல உயிர்கள் பலியாகி வருகிறது. அதிலும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என இவர்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல.

Also Read: அதிரடியாக சென்சார் போர்டில் இருந்து வெளிவந்த ஜெயிலர் விமர்சனம்.. ரஜினி-நெல்சன் தல தப்புமா?

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ஜெயிலர் படத்தின் அதிகாலை காட்சியை ரத்து செய்திருக்கிறார். காலையில் 9:00 மணிக்கு தான் முதல் காட்சிகளை திரையிடப்படுகிறது. இதனால் சற்று வசூல் பாதிக்கப்படும். ரசிகர்களின் உயிர் முக்கியம் என்பதால் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கின்றனர்.

இதேபோன்றுதான் இனி விஜய்யின் லியோ மற்றும் அஜித்தின் விடாமுயற்சி போன்ற படங்களுக்கும் அதிகாலை காட்சியை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னோட்டமாக இப்போது ஜெயிலர் தான் வசமாக சிக்கிக் கொண்டது. இதனால் படக்குழு வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற வருத்தத்தில் இருக்கின்றனர்.

Also Read: அடேங்கப்பா அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா!.. நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்ய ப்ரீ புக்கிங்கில் மிரட்டும் ஜெயிலர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்