நெருக்கடியில் தங்களைக் காப்பாற்றிய ரெட் ஜெயன்ட்.. பொன்னியின் செல்வன் மூலம் வதந்திக்கு வைத்த முற்றுப்புள்ளி

உதயநிதி ஸ்டாலின் அரசியலையும் தாண்டி தற்பொழுது சினிமா துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். ஆட்சி செய்யும் குடும்பத்தில் இருந்து வந்து நடிகராக தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தற்பொழுது பொறுப்பில் உள்ள அமைச்சராகவும் தனது பங்களிப்பினை வழங்கி வருகிறார். 

மாஸ் ஹீரோக்களின் படங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான அனைத்தும் படங்களுமே உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் தொடர்ந்து உதயநிதி கலக்கி வருகிறார். தற்பொழுது இவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கண்ட்ரோலில் தான் தமிழ் சினிமா இருக்கிறது என்றும் அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் என்று  உதயநிதியின் பெயரைக் கெடுக்கும் வகையில் பேசி வருகின்றனர்.

Also Read: ரெட் ஜெயண்ட்க்கு பினாமி இவர் தான்.. உதயநிதியை வச்சு செய்யும் பிரபலம்

இதனைத் தொடர்ந்து எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்கள் படம் எடுத்து இருந்தாலும் அதனை உதயநிதி நினைத்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்ற கருத்து சினிமா துறையில் பரவலாக நிலவி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்களோ அதற்கு மாறாக தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளனர்.

சினிமா துறையை பொறுத்தவரையிலும் எந்த ஒரு மாஸ் ஹீரோக்களின் படம் ரிலீஸ் ஆனாலும் அதற்கான பெருந்தொகையை அட்வான்ஸ் ஆக திரையரங்கு உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும். ஆனால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிக படங்களை வெளியிட தொடங்கியது முதல் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இருந்ததில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் உதயநிதிக்கு சாதகமாக பேசி வருகின்றனர்.

Also Read: அள்ள அள்ள குறையாத கஜானா, தொட்டதெல்லாம் பொன்னாகுது.. பல்லாயிரம் கோடி முதலீட்டில் உதயநிதி

அதிலும் மணிரத்தினம் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அதற்கான கலெக்ஷனை கூட  இன்னும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு கட்டவில்லை என்று தெரிவித்து வருகின்றன. தற்பொழுது வெளியாகி உள்ள வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூலை வைத்து பொன்னியின் செல்வன் படத்திற்கான கலெக்ஷனை கட்டி விடுவோம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் அடுத்தடுத்த வெளியாக உள்ள பெரிய படங்களின் கலெக்ஷனை வைத்து வாரிசு துணிவை சமாளித்து விடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் உதயநிதியின் மூலம் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படவில்லை என்றும் அவரால் தங்களுக்கு லாபம் மட்டுமே கிடைத்துள்ளது என்று பாராட்டி வருகின்றனர். அசுர வளர்ச்சி காணும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு சர்ச்சை கருத்துகளும் வதந்திகளும் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Also Read: மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி.. அமைச்சர் ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியாது

Next Story

- Advertisement -