5 டாப் நடிகர்களுக்கு ரெட் கார்ட்.. சேட்டையை ஓரம் கட்டினாலும் சிம்புவை விடாமல் துரத்தும் பிரச்சனை

Actor Simbu: சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தரமான சம்பவம் நடக்க இருக்கிறது. அதாவது ஹீரோக்கள் வைத்தது தான் சட்டம் என்ற ஒரு நிலை இப்போது இருக்கிறது. அதை வைத்து சில நடிகர்கள் ஓவர் ஆட்டம் போடுகின்றனர்.

ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதற்கு ஏற்ப இப்போது ஐந்து நடிகர்கள் ரெட் கார்டு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதுதான் இப்போது திரையுலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிம்பு, விஷால், எஸ் ஜே சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஓவர் குடைச்சல் கொடுத்ததால் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Also read: முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 5 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

அதாவது சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் அதில் இருந்து விலகி இருக்கிறார். ஏற்கனவே இதற்காக அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் இருந்த சமயத்தில் சிம்பு இப்படி செய்தது தயாரிப்பாளரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதன் காரணமாகவே இப்போது இவருக்கு ரெட் கார்டு வழங்கும் முடிவில் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. இப்படி சேட்டையை ஓரம் கட்டினாலும் சிம்புவை விடாமல் பிரச்சனை தொடர்கிறது.

அதேபோல் எஸ்ஜே சூர்யாவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இப்போது வரை தேதிகள் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து அதர்வாவும் அதிக முறை கால்ஷூட் சொதப்பல் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இவரைப் போலவே யோகி பாபுவும் தயாரிப்பாளர்களிடமிருந்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு தேதிகளை கொடுக்காமல் டீலில் விட்டிருக்கிறார்.

Also read: சிம்புவுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே சூர்யா.. பல வருஷத்துக்கு முன்னாடி பண்ண வேண்டிய படம் இப்ப பண்ண போறாங்க.!

இதற்கு அடுத்தபடியாக விஷால் செய்யும் அலும்பு ஊர் உலகமே அறிந்ததுதான். இப்படி இந்த ஐந்து நடிகர்களும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றிருக்கிறது. அங்கு நடந்த மீட்டிங்கில் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு அவர்கள் நேரில் வந்து சரியான விளக்கம் கொடுக்காத பட்சத்தில் ஒட்டுமொத்தமாக ஐந்து பேருக்கும் ரெட் கார்ட் கொடுத்து தடை விதிக்கப்படும் என்ற முடிவையும் அவர்கள் எடுத்துள்ளனர். இதனால் தற்போது பீதியில் உறைந்திருக்கும் ஐந்து நடிகர்களும் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ஓவர் ஆட்டம் போட்டால் இதுதான் கதி என்ற நிலையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

Also read: இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் சிம்பு.. அம்பலத்திற்கு வந்த ரகசிய உறவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்