2020 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்யமான 7 சம்பவங்கள்.. ஆனா இந்த ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள்

கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு குறைந்த அளவிலான கிரிக்கெட் போட்டிகளே நடைபெற்றன. குறைந்த அளவில் போட்டிகள் நடைபெற்றாலும் பல சாதனைகளும் அதில் இடம்பெற்றன.

மகேந்திரசிங் தோனி ஓய்வு – கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியஅணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து, கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணிக்காக அனைத்து விதமான கோப்பைகளையும் பெற்றுத் தந்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி.

Mahindra-singh-Dhoni-Cinemapettai.jpg
Mahindra-singh-Dhoni-Cinemapettai.jpg

ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்கள் – இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்களை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். வேகப்பந்து வீச்சாளர்களில் இவருக்கு முதலிடம் இருந்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (709), அனில் கும்ளே (619) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

Jamesanderson-Cinemapettai.jpg
Jamesanderson-Cinemapettai.jpg

மேக்ஸ்வெல், கேரி பார்ட்னர்ஷிப் – மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 303 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 73/5 என்ற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து,பார்ட்னர்ஷிப் அமைத்த மேக்ஸ்வெல், ஹேரி இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தனர். மேக்ஸ்வெல் (108), ஹேரி (106) இருவரும் ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்க்கு 212 ரன்கள் சேர்த்தனர்.

Maxwell-Carey-Cinemapettai.jpg
Maxwell-Carey-Cinemapettai.jpg

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் இறுதிப் போட்டி – டெல்லி அணி கடந்த ஐபிஎல்இல் முதன் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டு வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5வது முறையாகக் கோப்பை வென்றது.

Delhicapitals-Cinemapettai.jpg
Delhicapitals-Cinemapettai.jpg

​விராட் கோலி 22,000 ரன்கள் – இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், மூன்றாவது வரிசையில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை அதிவிரைவாக எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். கோலி 2020ஆம் ஆண்டில் ஒரு சதம் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Virat-Cinemapettai.jpg
Virat-Cinemapettai.jpg

​டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் – 2020ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5-0 என டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோல், சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என இரண்டாவது முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

IndiaVictory-Cinemapettai.jpg
IndiaVictory-Cinemapettai.jpg

​சுரேஷ் ரெய்னா ஓய்வு – இந்திய கேப்டனின் ஓய்வு முடிவை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு அறிவித்து ஷாக் கொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவரும் ஒன்றாக விளையாடியபோது, தோனியை ’தல’ என்றும், ரெய்னாவை ‘சின்ன தல’என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்தனர். தோனி ஓய்வுபெற்றவுடன், ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

SureshRaina-Cinemapettai.jpg
SureshRaina-Cinemapettai.jpg

தோனி மற்றும் ரெய்னா அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த சம்பவம் ரசிகர் மனதில் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் சாம்ராஜ்யத்தில் அவர்களுக்கு இடையே உள்ள நட்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததாக கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்தனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்