பத்தே நாளில் பயிர்க் கடன் தள்ளுபடிகான ரசீது வழங்கப்படும்.. முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தனது கட்சியான அதிமுகவின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.  அதுமட்டுமில்லாமல், மக்களுக்கு பயனுள்ள பல புது திட்டங்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார் முதல்வர்.

இந்நிலையில் இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது பயிர்க் கடன்  தள்ளுபடிகான அரசாணை ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுவிட்டது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் முதல்வர் எடப்பாடி  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாராம்.

அப்போது பேசிய எடப்பாடியார், பயிர் கடன் தள்ளுபடிகான ரசீது விவசாயிகளுக்கு பத்து முதல் பதினைந்து நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

edapaddi-palaniswami-2
edapaddi-palaniswami-2

மேலும் முதல்வரின் இந்த அதிரடியான அறிவிப்பால் விவசாய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருவதோடு, முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்