News Reader Soundarya: பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்தான் சௌந்தர்யா அமுதமொழி. இவர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமாகி இருக்கிறார். கம்பீர குரலாலும், தெளிவான உச்சரிப்பாலும் தனித்துவமாக மக்களிடம் பிரபலமானவர் தான் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா.
அப்படிப்பட்ட இவர் கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோய் பாதிப்பால் போராடி வந்திருக்கிறார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இவர் இறந்ததற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் இதில் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவாக இவரே அவருடைய அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்.
புற்றுநோய் பாதிப்பில் இருக்கும் பொழுது சௌந்தர்யா கொடுத்து அறிவுரைகள்
இவருடைய எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய் உருவாகி இருக்கிறது. இதை கண்டறிந்த பின்பு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஏ.எம்.எல் எனும் ரத்தப் புற்று நோய் ஏற்பட்டுள்ளது.இதை அக்யூட் மயலாய்டு லூக்யீமியா என்பார்கள். அதாவது குறுகிய காலகட்டத்தில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுவது தான் அக்யூட்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டு புற்று நோய்க்கு கடைசி நிலைமைக்கு போய் சிகிச்சை பலனளிக்காமல் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி மறைந்திருக்கிறார். இதற்கு இடையில் இவர் ஒரு விழிப்புணர்வாக போட்ட பதிவு என்னவென்றால் புற்றுநோய் வருவதை குறைக்க பல விஷயங்களை படித்தும் என் அனுபவத்தினால் பட்ட விஷயங்களையும் நான் கூறுகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதாவது முடிந்தவரை செயற்கை உணவுகளை உட்கொள்வதை தடுக்கவும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதும் மிகவும் அவசியமானது. குறிப்பாக அமெரிக்காவில் ரெட் புல் என்னும் செயற்கை பானத்தை குடிப்பதற்கு குடல் புற்றுநோய் வந்து 30 முதல் 40 வயதுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.
அந்த வகையில் புற்றுநோய் வருவதை குறைக்க நாம் தவிர்க்க வேண்டியது வெளி சாப்பாடுகள். அதாவது வெளியே வாங்கக்கூடிய உணவுகளை நாம் வாங்கியதும் அதை பிரித்து சாப்பிட்டு விடுவோம். ஆனால் அதில் அவர்கள் என்ன கலக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. எடுத்துக்காட்டு ரொட்டி, சாக்லேட், சிப்ஸ், போர்டலில் வரும் அனைத்து பானங்கள், ஊறுகாய்கள், உடனடி இஞ்சி பூண்டு, பசை போன்ற உணவுகள்.
அதனால் முடிந்தவரை இதை வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடலுக்கு ரொம்பவே நல்லது. உடலுக்கு தேவையான இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டால் மிக்க நல்லது. மேலும் ரசாயனங்கள் உடலில் சேர சேர வேதியல் ரீதியாக உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் விதமாக புற்றுக்கு கட்டிகளை உருவாக்குகிறது என்பதுதான் என்னுடைய புரிதல்.
அதனால் முடிந்தவரை ஆரோக்கியமான உணவை வீட்டில் செய்து சாப்பிட்டு நலமுடன் வாழ நான் கொடுக்கும் அனுபவ ரீதியான அட்வைஸ் என்று விழிப்புணர்வு பதிவை போட்டிருக்கிறார்.