வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இந்த 2 நடிகைகளுடன் மட்டும் இவ்வளவு படங்களா.! எம்.ஜி.ஆருடன் கிசுகிசுவுக்கு இதுதான் காரணமா.?

தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு ஒரு தனி இடம் இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் அவரின் மேல் அதிக அன்பு கொண்டனர். அரசியலில் அவர் எவ்வாறு ஜொலித்தாரோ அதேபோன்றுதான் சினிமாவிலும் அவர் சிறந்த நடிகராக விளங்கினார்.

சதிலீலாவதி திரைப்படத்தில் தொடங்கி இவர் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார். பிரபலமாக இருந்தாலே கிசுகிசுக்களும் சேர்ந்தே வந்துவிடும். அதேபோன்று எம்ஜிஆர் குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கிறது.

அதிலும் முக்கியமாக அவரை இரண்டு நடிகைகளுடன் இணைத்து ஏராளமான செய்திகள் அப்போது வெளிவந்திருக்கிறது. ஏனென்றால் எம்ஜிஆர் தொடர்ச்சியாக அந்த இரண்டு நடிகைகளுடன் தான் நடித்து வந்தார். இதுவே ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டது.

அந்த வகையில் எம்ஜிஆர், சரோஜா தேவியுடன் இணைந்து கிட்டத்தட்ட 26 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரையில் திறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்ட இவர்கள் அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இதுவே அவர்கள் பற்றிய கிசுகிசுவுக்கு காரணமாக அமைந்தது.

அதேபோன்று எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக இருந்தனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன், குமரிக்கோட்டம், ஒரு தாய் மக்கள் என்று கிட்டத்தட்ட 28 திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே அவர் ஜெயலலிதாவுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். மேலும் இவர்கள் இருவரும் பல இடங்களில் சேர்ந்து வருவதும் சர்ச்சையாக பேசப்பட்டது. அதிக நட்பும், நெருக்கமும் இருந்ததால் தான் எம்ஜிஆர் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் எம்ஜிஆருடைய கால்ஷூட்டை ஜெயலலிதாவிடம் தான் கேட்கும் நிலைமையும் இருந்ததாம். இப்படி அவர்கள் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தது. இதற்கு சரியான உதாரணமாக ஏஎல் விஜய் தலைவி என்ற படத்தை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News