விஜய் செய்ததை பிரசாந்த் செய்யவில்லை.. இதனால்தான் மார்க்கெட் இல்லாமல் இந்த போராட்டம்!

இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித் ஆகிய இருவருக்குமே முன்னோடி என்றால் நடிகர் பிரசாந்த் தான். அன்றைய கால ரசிகர்கள் அனைவருக்கும் விருப்பமான நடிகராக வலம்வந்தார். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் தான் இருந்த சுவடு கூட தெரியாத அளவுக்கு மறைந்துவிட்டார் என்பது சோகமான விஷயம்தான்.

அஜித் விஜய் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் வெற்றியை படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே டாப்பில் இருந்தவர்தான் பிரசாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு பிரசாந்த் தான் என சொல்லும் அளவுக்கு அவரது சினிமா மார்க்கெட் இருந்தது.

ஆனால் திடீரென பிரசாந்த் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்ததற்கு காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதில் பெரும்பாலும் சொந்த தயாரிப்புகளில் நடித்தது தான் அவரது இழப்புக்கு காரணமாம்.

பிரசாந்த் தன்னுடைய அப்பா தயாரிப்பில் பெரும்பாலான படங்கள் நடித்துள்ளார். அதைப்போல் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும்போது சம்பளத்தை ஏற்றுவதில் குறியாக இருந்த பிரசாந்த் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வில்லை. இதன் காரணமாக பிரசாந்தை வைத்து படம் தயாரிக்க பலரும் முன்வரவில்லை.

ஒருவேளை வெளி தயாரிப்புகளிலும் சொந்தத் தயாரிப்பிலும் மாறி மாறி நடித்திருந்தால் ஒரு படம் போனால் இன்னொரு படம் கைகொடுக்கும் என நம்பி பல தயாரிப்பாளர்கள் அவரை தேடி வந்திருப்பார்களாம். ஆனால் பிரசாந்த் அந்த விஷயத்தில் கோட்டை விட்டது தான் அவருடைய சரிவுக்கு காரணம்.

prashanth-cinemapettai
prashanth-cinemapettai

அதேபோல் விஜய் செய்ததை பிரசாந்த் செய்யவில்லை என்று சொன்னதற்கு காரணமே விஜய் வெளி தயாரிப்புகளில் நடிக்கும்போது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருப்பாராம். அதற்காக சம்பளத்தை பொருட்படுத்தாமல் நடித்து வந்தார். இதன் காரணமாகவே தற்போது வரை தளபதி விஜய்யை வைத்து படம் தயாரிக்க குறைந்தது நான்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

அதேபோல் விஜய் சரியான நேரத்தில் அப்பா இயக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் மட்டுமே தனக்கு கை கொடுக்காது என்பதை உணர்ந்து வெளி தயாரிப்புகளில் நடிக்கலாம் என முடிவு செய்ததுதான் அவரது வாழ்க்கையை மாற்றியது என்பது மறுக்க முடியாத ஒன்று.

சினிமாவில் தயாரிப்பாளர்களுடன் நல்லுறவு இல்லாததால்தான் பிரசாந்த் என்று சினிமாவில் தனக்கான இடத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் தற்போது தமிழ் சினிமாவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறார்.

- Advertisement -