பிரசாந்தை நம்பவைத்து ஏமாற்றிய மனைவி.. விவாகரத்தால் சின்னாபின்னமான வாழ்க்கை!

தமிழ் சினிமாவில் இன்று விஜய், அஜித் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டிய பிரசாந்த் சினிமா வாழ்க்கை தடம் புரண்டு சின்னாபின்னமானதற்கு சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பல ஏமாற்றம் தான் காரணம் என அப்போதே பல பத்திரிகைகளில் வெளியானது.

பிரசாந்த் கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் நடந்த ஒரு வருடத்திலேயே குழந்தை பிறந்த பிறகு கிரகலட்சுமிக்கும் பிரசாந்த்க்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடைபெற்றது.

இதில் முழுக்க முழுக்க தவறு கிரகலட்சுமி மீதுதானாம். கிரகலட்சுமிகும் வேறு ஒருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் அதை மறைத்து தான் பிரசாந்தை திருமணம் செய்து கொண்டாராம் கிரகலட்சுமி.

பின்னர் இந்த விஷயம் பிரசாந்துக்கு தெரியவர குடும்பமே பேரதிர்ச்சி அடைந்து விட்டதாம். ஒரே நேரத்தில் இரண்டு கணவர்களா எனும் அளவுக்கு இருவருக்குள்ளும் பிரச்சனை அதிகமாகி உள்ளது. மேலும் முதல் கணவரும் விவாகரத்து நடைபெறாத நிலையில் கிரகலட்சுமி மீது உரிமை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதனால் கடுப்பான பிரசாந்த் உடனடியாக வழக்கை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றார். பின்னர் தான் சொத்துக்களை ஏமாற்றி வாங்குவதற்காக உள்ளே வந்த கூட்டம் என்பதை புரிந்து கொண்டாராம் பிரசாந்த். அதன் பிறகு எப்படியோ நீதிமன்றங்களில் வாதாடி இந்த கல்யாணம் செல்லாது என ஆர்டர் பிறப்பிக்கப்பட்டது.

prashanth-kiragalakshmi
prashanth-kiragalakshmi

இதுவே பிரசாந்தின் மன நிலையை மிகவும் பாதித்த நிலையில் அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறி வந்துள்ளார். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தான் பிரசாந்த்தின் முகத்தில் ஒரு ஹிட் கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அந்தகன் படத்தின் புகைப்படங்களை பார்க்கும் போது பிரசாந்த் மீண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் பிரசாந்த் வாழ்க்கையில் மீண்டும் நல்லது நடக்கப் போகிறது என கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -