தளபதி 65 பூஜைக்கு ஹீரோ விஜய் வந்தாச்சு, ஹீரோயின் ஏன் வரல.. கோலிவுட்டை துளைத்தெடுக்கும் கேள்விகள்!

மாஸ்டர் படத்தின் வெற்றி விஜய்க்கு ஒரு புதிய தெம்பு கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். 50% பார்வையாளர்களை வைத்துக்கொண்டே மாஸ்டர் படம் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்ததால் கண்டிப்பாக தளபதி 65 படம் மிகப்பெரிய வசூலை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த முறையும் விஜய் இளைஞர் கூட்டணியில் வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களில் விஜய்யின் மார்க்கெட் மிகப் பெரிய உயரத்திற்கு வந்ததுக்கு காரணம் விஜய் இளம் இயக்குனர்களை நம்பி தன்னுடைய படங்களை ஒப்படைத்தது தான்.

அந்த வகையில் தான் விஜய்யின் தீவிர ரசிகர் அட்லீ தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை கொடுத்தார். அதேபோல லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு மாஸ்டர் என்ற மாஸ்டர் பீஸ் படத்தைக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே மிஷ்கினின் முகமூடி படத்தில் நடித்தவர் தான்.

vijay-pooja-hegde
vijay-pooja-hegde

மிகப்பெரிய படத்தின் பூஜை நடைபெற்றபோது படத்தின் நாயகி வந்திருக்க வேண்டாமா என கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் பூஜை புகைப்படங்கள் வெளியாவதற்கு முன்னரே தன்னால் தளபதி 65 படத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற வருத்தத்தை பூஜா ஹெக்டே பதிவு செய்தார்.

pooja-hegde-post
pooja-hegde-post

தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை எனவும், கண்டிப்பாக தளபதி 65 படத்தில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த பதிவிற்கு 40 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன.

- Advertisement -