பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விஜய், மகேஷ்பாபு வெளியேற காரணம் இதுதான்.. 7 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

மணிரத்னம் தற்போது கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டுக்கு மேல் பொன்னியின் செல்வன் எனும் படத்தை இரண்டு பாகமாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், விக்ரம்பிரபு போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பொண்ணியின் செல்வன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் முதல் பாகத்திற்கான வேலையை முடித்துவிட்டு வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பே மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகிய இருவரையும் வைத்து உருவாக்க நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பேச்சுவார்த்தைகள் முடிந்து இறுதியாக படப்பிடிப்பு செல்லும் தருவாயில் திடீரென கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

ஆனாலும் அதற்கான காரணம் என்ன என்பதை படக்குழுவினரும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எதற்காக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரும் விலகினார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. மணிரத்தினம் இருவரிடமும் கதை சொல்லிவிட்டு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினாராம். இந்நிலையில் தான் இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் கால்ஷீட் ஃப்ரீயாக இருந்தால் அந்த பக்கம் மகேஷ்பாபு வேற படத்தில் பிஸியாக இருந்துள்ளார். அதேபோல் மகேஷ்பாபு படப்பிடிப்பு இல்லாமல் இருந்த சமயத்தில் விஜய் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். இருவருக்குமே கொஞ்சம்கூட ஒத்துவராத கால்ஷீட் பிரச்சனையால் தான் படம் கைவிடப்பட்டது.

அதன்பிறகு மணிரத்தினம் எவ்வளவு போராடியும் இருவரையும் வைத்து படம் இயக்க முடியவில்லை. இப்போது 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக படம் இயக்கி வந்தாலும் விஜய் மற்றும் மகேஷ்பாபு இல்லையே என்ற ஒரு சின்ன குறை இன்னமும் மணிரத்தினம் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறதாம்.

ponniyil-selvan-initial-cast
ponniyil-selvan-initial-cast

விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரும் இணைந்து நடித்திருந்தால் பொன்னியின் செல்வன் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனையாக ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.

- Advertisement -