அண்ணா கதையை மாற்றி விடலாம்.. செல்வராகவனுக்கு கட்டளை போட்ட தனுஷ்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ள செய்தி அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

அதற்கு தகுந்தார்போல் வெளியான நானே வருவேன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட செல்வராகவனின் மற்ற படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.

ஆனால் திடீரென தனுஷ் நானே வருவேன் படத்தில் கதையை மாற்றச் சொல்லி செல்வராகவனிடம் கூறியுள்ளார். இதனால்தான் அவர் அவசர அவசரமாக தற்போது ராயன் என்ற பெயரில் ஒரு வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையை எழுதி வருகிறார்.

மூன்று அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான மோதல் தான் இந்த படத்தின் கதையாம். சரி, திடீரென செல்வராகவன் நானே வருவேன் படத்தை ஓரம் கட்டிவிட்டு ராயன் என்ற படத்தின் கதையை எழுத என்ன காரணம் என விசாரித்துள்ளனர்.

அப்படி விசாரித்தபோது பல தகவல்கள் வந்துள்ளன. சமீபத்தில் செல்வராகவன் மற்றும் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. கொஞ்சம் ஃபேண்டசி கதையில் உருவாகி இருந்தது.

அதே போன்ற திரில்லர் ஃபேண்டசி கதையில்தான் நானே வருவேன் என்ற படம் உருவாகி இருந்ததாம். இதனை கவனித்த தனுஷ், அந்தக் கதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதன் காரணமாகவே தற்போது புதுப்பேட்டை போன்ற கேங்ஸ்டர் படக்கதையை அவசர அவசரமாக உருவாக்கி வருகிறார் செல்வராகவன்.

naane-varuven-cinemapettai
naane-varuven-cinemapettai
- Advertisement -