வளர்த்த கிடா மார்பில் முட்டுவதா.! சிவகார்த்திகேயன் செயலால் நொந்து போன தயாரிப்பாளர்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்று பிரபலமாக இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பல பிரச்சனைகளை சந்தித்தது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஒரு பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்தத் திரைப்படத்திற்கு முன்பு லிங்குசாமி எடுத்த எந்த படமும் ஓடாமல் தோல்வியை சந்தித்தது.

இதனால் அவரும் தனக்கென ஒரு பிரேக் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் அவர் நம்பி இருந்தது இந்த ரஜினிமுருகன் திரைப்படத்தை மட்டும்தான். இந்தப் படமும் சிக்கலில் மாட்டியதால் தவித்துப் போன அவருக்கு ஞானவேல் ராஜாதான் உதவி செய்தார்.

அவர்தான் ரஜினி முருகன் படத்திற்கு ஏற்பட்ட பண பிரச்சனையை தீர்த்து வைத்து படம் ரிலீஸ் செய்ய உதவினார். அப்பொழுது அவர் பிரச்சனையை தீர்த்த கையோடு சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை அவருடைய அடுத்த படத்திற்காக வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அப்படி அவர் சிவாவை வைத்து எடுக்க முடிவு செய்த திரைப்படம்தான் மிஸ்டர் லோக்கல். அந்தப் படத்திற்காக சிவாவுக்கு அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் படத்தை அப்போது எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் மளமளவென இமயமலை போல் வளர்ந்து 15 கோடி சம்பளத்துக்கு போய்விட்டார். அதனால் மிஸ்டர் லோக்கல் படத்தை மீண்டும் தயாரிக்க முன்வந்த ஞானவேல் ராஜாவிடம் சிவகார்த்திகேயன் 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

நாம் பார்த்து வளர்த்த பையன் இப்படி கேட்கிறாரே என்ற ஒரு பெரிய மனக்கசப்பு ஞானவேல் ராஜாவுக்கு இருந்துள்ளது. மேலும் நாம புக் பண்ணும் போது ஒரு கோடி சம்பளம் ஆனால் இப்பொழுது 15 கோடி கேட்கிறாரே என்ற கோபமும் அவருக்கு இருந்திருக்கிறது.

இருப்பினும் அந்த பணத்தை தருவதற்கு சம்மதித்த அவர் 11 கோடி சம்பளம் கொடுத்து இருக்கிறார். ஆனால் மீதி பணம் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்தும் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் அவர் தற்போது மீதம் இருக்கும் சம்பள பணத்தை கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்