திரை பிரபலங்களை அதிகளவு தாக்கும் கொரோன.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. இதுதவிர மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபகாலமாக திரைபிரபலங்கள் பலர் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருவர் இருவர் அல்ல அடுத்தடுத்து பல நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வகையில் நடிகர்கள் சத்யராஜ், அருண் விஜய், விஷ்ணு விஷால், மகேஷ்பாபு, ஜான் ஆப்ரகாம், ஏக்தா கபூர் மற்றும் நடிகைகள் த்ரிஷா, தமன்னா, ஷெரீன், கீர்த்தி சுரேஷ், ரைசா வில்சன் என கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இத்தனை திரை பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அவர்களே சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்த இரண்டே நாட்களில் தொற்றில் இருந்து மீண்டு விட்டதாகவும் அடுத்த பதிவை செய்து வருகின்றனர். இதனால் ஒருபுறம் அவர்கள் உண்மையாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் உண்டாகிறது.

என்னதான் கொரோனா தொற்று குறித்து அரசு பல விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் விளம்பரங்களையும் வழங்கினாலும் மக்கள் இன்னும் கவனக்குறைவாகவே சுற்றி வருகிறார்கள். எனவே மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கூட திரைபிரபலங்கள் மூலம் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில் அனைத்து நடிகர்களும் மிகவும் பாதுகாப்பாக இருந்தும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என ஏதோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளனர். அதனால் ஒருவேளை இதுவும் ஒருவகை விழிப்புணர்வாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்