எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

தனக்கு கொடுக்கக்கூடிய கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை தத்ரூபமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர் தான் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா. ஆக்சன், திரில்லர் மற்றும் வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து வருகிறார்.

Also Read:திரிஷாவுக்கு பொருத்தமான ஜோடியாக நடித்த 5 நடிகர்கள்.. நிஜத்திலும் வளைத்து போட நினைத்த சிம்பு

இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் இவருக்கு ஹிட் படங்களாக மாறி உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் டாப் 8 ஹீரோக்களான கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோருடன் நடித்த பெருமை இவரையே சேரும்.

தூங்காவனம், மன்மதன் அன்பு ஆகிய படங்களில் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். தன் ஆரம்ப காலத்தில் விஜய்யுடனும்,சூர்யாவுடனும் சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் பேட்டையில் ரஜினியுடன் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார்.

Also Read:பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?

தற்பொழுது பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது வருகிறார். மேலும் வெளிவர இருக்கும் லியோ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இத்தகைய வாய்ப்புகளை தவறவிட்ட நயன்தாராவை காட்டிலும் இவர் தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார். மேலும் தற்பொழுது நயன்தாராவின் மார்க்கெட்டை முறியடித்த பெருமையை பெற்று வருகிறார் த்ரிஷா. இன்று தன் 40வது பிறந்தநாள் காணும் இவர் மேலும் பல பட வாய்ப்புகளை பெற வேண்டி பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார். இந்த வருடத்தில் இவரின் படங்கள் பல வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read:திரிஷா இல்லைனா நயன்தாரா.. அடுத்த கதாநாயகியை லாக் செய்த மணிரத்தினம்

- Advertisement -