சினிமாவில் சம்பாதித்ததை மக்களுக்கு வாரி கொடுத்த 4 வள்ளல்கள்.. காசு, துட்டு என திரியும் ஹீரோக்களுக்கு இது ஒரு பாடம்

பல நடிகர்கள் திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது கடின உழைப்புக்குப் பின் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர். அப்படிப்பட்ட நடிகர்களின் சம்பளம் லட்சத்திலிருந்து கோடி வரை உயரும் அவர்கள் தாங்கள் சம்பாதித்த சம்பளத்தை அவர்களுக்கு போக மீதம் உள்ள பாதி சொத்துக்களை அனாதை இல்லம், ஏழை மாணவ மாணவிகளின் கல்வி செலவு என அவர்கள் கொடுத்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் தங்களது பாதி சொத்துக்களை தானமாக கொடுத்துள்ளனர். அவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

படாபட் ஜெயலட்சுமி: நடிகை படாபட் ஜெயலட்சுமி மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து முள்ளும் மலரும், காளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பை வெகுவாக வெளிப்படுத்தினார். தனது வீட்டில் மனஅழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இவர், சம்பாதித்த அனைத்து பணத்தையும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக எழுதி வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 80-களில் எம்ஜிஆரை விட 4 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்.. தூக்கத்தை தொலைத்த புரட்சித்தலைவர்

ஸ்ரீவித்யா: நடிகை ஸ்ரீவித்யா சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவித்யா. திருமணம் செய்து கொண்டு அதன்பின் விவாகரத்து பெற்றார். இவர் பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நிலையில் முதுகெலும்பில் ஏற்பட்ட புற்றுநோயால் உயிரிழந்தார். ஸ்ரீவித்யா சொந்தமாக முதியோர்களுக்கான இல்லத்தை ஆரம்பித்து, அதில் தான் சம்பாதித்த பணத்தை தானமாக அளித்துள்ளார்.

என்.எஸ். கிருஷ்ணன்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அவர்களின் நகைச்சுவை நடிப்பு பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இவரது நடிப்பு தமிழ் சினிமாவிற்கு முக்கியமானதாக அமைந்தது. என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பெயரில் கலைவாணர் அரங்கம் என ஒரு அரங்கத்தை கலைஞர் கருணாநிதி காட்டினார். இவரது பெயரில் சொந்தமாக டிரஸ்ட் உள்ள நிலையில் ஏழை மாணவ மாணவிகளுக்காக கல்வி செலவிற்கு உதவியாய் அமைந்து வருகிறது.

Also Read : முதன் முதலாக ஒரு கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படம்.. எம்ஜிஆர் படத்தையே பின்னுக்கு தள்ளிய நடிகர்

எம்.ஜி.ஆர்: மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கும் காலகட்டத்திலேயே மக்களுக்காக பல உதவிகளையும் செய்தவர். ஏழை எளிய மாணவர்களுக்காக பள்ளி படிப்பதற்காக தனது வருமானத்தில் இருந்தே பல உதவிகளை செய்து வந்தார். இதனிடையே முதலமைச்சரான எம்.ஜி.ஆர் தொடர்ந்து சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழக மாணவர்களுக்காக கொண்டு வந்தவர். எம்.ஜி.ஆர் டிரஸ்ட் சென்னையில் செயல்பட்டு வரும் நிலையில், அந்த ட்ரஸ்டின் மூலமாக பல ஏழை மாணவர்களின் கல்விச் செலவிற்கு உதவியாக உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

லாரன்ஸ் & சூர்யா: இதுபோன்று இன்னும்  இப்பொழுதுள்ள நடிகர்களும் செய்து வருகிறார்கள் குறிப்பாக ராகவா லாரன்ஸ் ஊனமுற்றவர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அனாதை குழந்தைகளுக்கும் என்று தனியாக டிரஸ்ட் உருவாக்கி உதவி செய்து வருகிறார். இதேபோல் சூர்யா ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து  குழந்தைகளுக்கு உயர்கல்வி கொடுத்து உதவி செய்து வருகிறார். இதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் உதவி செய்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள் இவர்களை மனதார பாராட்டலாம்.

Also Read : வாய்ப்புக்காக பொய் சொன்ன எம்ஜிஆர்.. சட்டையை பிடித்து சண்டை போட்ட இயக்குனர்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -