அரசியலில் ஜெயிக்க எந்த எல்லைக்கும் போகத் தயார்.. 4 விஷயங்களை அதிரடியாக செய்யப்போகும் விஜய்

Actor Vijay: எத்தனையோ நடிகர்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்ததையொட்டி ரசிகர்களின் பேராதரவு இருக்கிறது என்ற தைரியத்தில் அரசியலிலும் ஜெயிப்பதற்கு இறங்கி விடுகிறார்கள். ஆனால் அப்படி வந்த நடிகர்களில் எம்ஜிஆரை தவிர வேற யாருமே அரசியலில் நிற்க முடியாமல் போய்விட்டது. அதனாலயே பலரும் அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் விஜய் மட்டும் தற்போது அரசியலில் நுழைந்தே ஆக வேண்டும். அத்துடன் ஜெயித்து விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை கடைப்பிடித்து வருகிறார். அதற்காக என்னென்ன செய்யணுமோ அதை எல்லாம் ஒரு பக்கம் செய்து மாணவர்களை இவர் பக்கம் திரும்பும்படி செய்து விட்டார். அடுத்ததாக அரசியலில் ஜெயிக்க முக்கியமான நான்கு விஷயங்களை அதிரடியாக செய்யப் போகிறார்.

Also read: இந்த 13 இடங்களில் வெட்டி விட்ட சென்சார் போர்டு.. இதுவரை விஜய் படத்திற்கு நடக்காத கெட்டபெயர்

அதாவது தமிழ்நாட்டில மினி கவர்மெண்ட் மாதிரி உருவாக்கப் போகிறாராம். அதற்காக அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த இருக்கிறார். அந்த வகையில் முதலில் பெண்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யப் போகிறார்.

அதனால் மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்களுக்கு வட்டி இல்லாத கடனை கொடுக்கப் போகிறாராம். அத்துடன் மாணவர்களுக்கு இலவச கல்வியை கொடுத்து அவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருங்கால படித்த சமுதாயத்தை உருவாக்கப் போகிறாராம். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திலும் இவருடைய முழு பங்களிப்பையும் கொடுக்க இருக்கிறார்.

Also read: என்னது அஜித், ஷாலினி விவாகரத்தா.? விஜய் போல அதிர்ச்சியை கிளப்பிய ட்வீட்

அந்த வகையில் திறமையான டாக்டர்களை வைத்து இலவசமாக மருத்துவம் கொடுக்கப் போகிறாராம். அதற்கு எவ்வளவு செலவானாலும் இவரால் முடிந்தவரை பல நல்ல விஷயங்களை செய்வதற்கு தயாராக இருக்கிறார். ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் குட்டி கவர்ன்மெண்டை விஜய் நடத்தப் போகிறார்.

இந்த ஒரு விஷயத்தை ஏற்கனவே பிரபாகரன் ஸ்ரீலங்காவில் பண்ணியிருக்கிறார். அதேபோலவே விஜய் தமிழ்நாட்டிலும் பண்ணப் போகிறார். அதுவும் இந்த அத்தனை விஷயங்களையும் எலக்சனுக்கு முன்னாடியே செய்ய வேண்டும் என்று ரொம்பவே பரபரப்பாக வேலையை பார்த்து வருகிறார். எப்படியாவது அரசியலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறார்.

Also read: நாங்கல்லாம் அப்பவே அப்புடி.. நாசுக்காக காய் நகர்த்தி விஜய்க்கு ஸ்கெட்ச் போடும் முக்கிய புள்ளி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்