துண்டு சீட்டு கூட இல்லாமல், ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதம் செய்ய தயார்.. சவால் விடுத்த எடப்பாடியார்!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். மேலும் இன்று முதல், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

என்னவென்றால் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களை குறித்து ஸ்டாலினிடம் தனித்தனியாக விவாதிக்க தயாராக உள்ளேன் என்று தமிழக முதல்வர் விடுத்த அழைப்பின் மூலம் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடியார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் போது ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக ஒரே மேடையில் ஸ்டாலின் உடன் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்கத் தயார் என்ற சவாலை முதல்வர் முன்வைத்துள்ளார்,

ஆகையால் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொள்ள இருப்பதால் அப்பொழுது முதல்வருடன் ஸ்டாலின் விவாதத்தில் ஈடுபட உள்ளாரா? என்ற கேள்வியை முன்வைக்க உள்ளதாக இந்தியாடுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் தற்போது தெரிவித்துள்ளார்.

எனவே ஸ்டாலினும் எடப்பாடியாரும் ஒரே மேடையில் விவாதிக்க தயாராகும் போது அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கி விடும்.

- Advertisement -