தனுஷ் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி.. நாலா பக்கமும் கொடுத்த நெருக்கடியால் எடுத்த முடிவு

Actor Dhanush: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக தனது 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பண்ண இருக்கிறார். அதுவும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குனரும் தனுஷ் தான்.

மேலும் அடுத்த அடுத்ததாக தனுஷின் லயன் அப்பில் நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னதாகவே மதுரை அன்புச்செழியன் இடம் ஒரு படம் பண்ணி தருவதாக குறிப்பிட்ட தொகையை தனுஷ் வாங்கி இருக்கிறாராம். இப்போது அவர் படத்தை சீக்கிரம் முடித்து கொடுக்க சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார்.

Also Read : ஹீரோ விக்ரமுக்கே படத்தின் மேல அக்கறை இல்ல.. தனுஷ் படத்தில் வந்த மொத்த வம்பு

சன் பிக்சர்ஸ் படத்தை முடித்த பிறகு உங்கள் படத்தை பண்ணி தருகிறேன் என்ற தனுஷ் கூறியிருக்கிறார். ஆனால் அன்பு செழியன் விடாப்படியாக இருப்பதால் உடனடியாகவே இந்த படத்தையும் தனுஷ் கையில் எடுக்க இருக்கிறார். மேலும் அந்த படத்தில் தனுஷ் குடும்பத்தில் இருந்து ஹீரோ ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.

கஸ்தூரிராஜாவின் பேரன், அதாவது தனுஷின் அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் தனுஷ் தான் இயக்கப் போகிறார். மேலும் படத்தில் சில காட்சிகளில் கெஸ்ட் ரோலில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : நிராசையாக போன சிவகார்த்திகேயன், தனுஷ் ஆசை.. என்னதான் முட்டி மோதினாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்

ஏற்கனவே கஸ்தூரிராஜா இயக்குனராக உள்ள நிலையில் அவர்களது மகன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கிறார்கள். அதிலும் தனுஷின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. தமிழ் சினிமாவை தாண்டி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அவர் கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம்.

இப்போது அவர்கள் குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹீரோ வர இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அன்புச் செழியன் கொடுத்து நெருக்கடியால் இப்படி ஒரு முடிவை தனுஷ் எடுத்திருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Also Read : மாலத்தீவில் நடக்காதது ஜெயிலர் ரிலீஸில் நடந்து விட்டதே.. தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த முத்துவேல் பாண்டியன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்