மாஜி அமைச்சர் மணிகண்டன் மீதான மறுவிசாரணை.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய நடிகை சாந்தினி

Ex-minister Manikandan and Actress Chandini: பணமும் பதவியும் இருந்தால் என்ன வேணாலும் பண்ணலாம் என்று பல இடங்களில் தவறுகள் தலைவிரித்து ஆடுகிறது. அதில் சில விஷயங்கள் வெளி வருகிறது. பல உண்மைகள் அப்படி கமுக்கமாகவே மறைந்து விடுகிறது. ஆனால் தற்போது சோசியல் மீடியா அனைவரது கையிலும் இருப்பதால் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் உண்மையை போட்டு உடைத்து விடுகிறார்கள்.

அந்த வகையில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் கொடுத்து இருக்கிறார். அதாவது அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர்தான் எம் மணிகண்டன். இவரை பற்றி சாந்தினி கூறியது என்னவென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் என்னுடன் குடும்பம் நடத்திருக்கிறார். பின்னர் கர்ப்பமானதும் அதை கலைக்க சொல்லி பிரிந்து விட்டதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை காவல் நிலையத்தில் நடிகை சாந்தினி புகார் கொடுத்திருக்கிறார்.

நியாயம் கேட்டு போராடிவரும் நடிகை சாந்தினி

இவர் கொடுத்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பெங்களூரில் அவரை கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் அதன் பின் மணிகண்டன் ஜாமினில் வெளிவந்திருக்கிறார். வெளிவந்ததுடன் நடிகை சாந்தனிடம் சமரசம் செய்து கேசை வாபஸ் பண்ண வைத்து விட்டார். இதனால் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இதனை அடுத்து நடிகை சாந்தினி, மணிகண்டன் வீட்டிற்கு சென்று இருக்கிறார். ஆனால் அங்கே போன இடத்தில் இவரை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் ஏமாந்து போன சாந்தனி எண்ணை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதால் தான் நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றேன். ஆனால் தற்போது என்னை சந்திக்காமல் தலைமறைவாகி விட்டார் என்று மறு புகார் கொடுத்திருக்கிறார்.

பிறகு மதுரையில் இருக்கும் உயர் நீதிமன்ற கிளையில் மறுபடியும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் நான் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். பிறகு நான் கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை கலைப்பதற்கு என்னை மிரட்டினார். இது தொடர்பாக அடையார் காவல் நிலையத்தில் கடத்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை தெரிந்து கொண்ட மணிகண்டன் உறவினர்கள் பலரும் கேசை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் கொடுத்தார்கள். நான் அப்படி திரும்ப பெறவில்லை என்றால் என்னை உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டினார்கள். இதனை தொடர்ந்து மணிகண்டன் குடும்பத்தார் மற்றும் அவருடைய அம்மாவும் என்னை பயங்கரமாக மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் காவல் துறை என்னை காப்பாற்றி மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனாலும் என்னை தொடர்ந்து புகார் அளிக்க விடாமல் மணிகண்டன் பண பலத்தை யூஸ் பண்ணி நிறைய குடைச்சலை கொடுத்து இருக்கிறார். அதை எல்லாம் தாண்டி ராமநாதபுரத்தில் பி2 பஜார் காவல் நிலையத்தில் 2022 ஆம் நவம்பர் 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

ஆனாலும் அவருடைய பதவி மற்றும் பணம் அவர் மீது எந்தவித விசாரணையும் வைக்காமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதனால் இந்த வழக்கை மறுவிசாரணைக்காக சிபிசிஐடி-க்கு மாற்ற கோரிக்கை கொடுத்து இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

- Advertisement -