வசூல் ரீதியான வெற்றி யாருக்கு.. வாரிசு vs துணிவு, உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்

கோலிவுட்டில் கமல் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்கள் தான் நடிகர் விஜய்யும், அஜித்தும். உண்மைய சொல்லப்போனால் இன்றைய கோலிவுட் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இவர்களின் படங்களை நம்பித்தான் இருக்கிறது. இதில் இவர்கள் கமல் மற்றும் ரஜினியையே தாண்டி விட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

இதற்கிடையில் தான் அஜித் விஜய்யின் படங்கள் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் ஜனவரி பதினொன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. அன்றைய தினம் ஒட்டு மொத்த தமிழகமே களேபரம் ஆகி விட்டது என்று கூட சொல்லலாம். மேலும் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருக்குள் பொங்கல் வின்னர் யார் என்று போட்டியும் தொடங்கிவிட்டது.

Also Read: அஜித்தோட முடிந்த சாம்ராஜ்யம்.. திடீர் பிரச்சினையால் மொத்தத்தையும் க்ளோஸ் செய்த தயாரிப்பாளர்

ஒரு பக்கம் ரசிகர்கள், ஒரு பக்கம் சினிமா விமர்சகர்கள், யூடியூப் சேனல்கள் என அவரவர்கள் தங்களின் சொந்த கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் பொங்கல் வின்னர் யார் என்ற ஆதாரப்பூர்வமான புள்ளி விவரம் யாருக்கும் தெரியாது. தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் ரவீந்திரன் முதன்முறையாக இந்த விவகாரம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது வாரிசு மற்றும் துணிவை பொருத்தவரைக்கும் அதிகப்படியான ரீச் நடிகர் அஜித்தின் துணிவு படத்திற்கு இருந்தாலும், பொருளாதார ரீதியான வெற்றி என்பதை பெற்றது நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் தான் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read: அடுத்தடுத்து தனுஷ், விஜய்யை லாக் செய்த மாறன் பேமிலி .. மாஸ்டர் பிளானில் வெளிவரும் படங்கள்

மேலும் பேசிய அவர் அஜித்தை பொருத்தவரைக்கும் அவருக்கு தமிழ்நாட்டில் நல்ல ரீச் இருக்கிறது. அதற்கான வேலைகளை மட்டும் செய்கிறார். ஆனால் நடிகர் விஜய்யை பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, பெங்களூரு என அதிக பிடித்திருக்கிறது. அவர் ரசிகர்களை சென்றடைந்த விதமே வேறு என்று கூறியிருக்கிறார்.

மேலும் ரவீந்திரன் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மார்க்கெட்டை என்பது உண்மை என்று கூறியிருக்கிறார். மேலும் இந்தப் பொங்கல் போட்டியில் வணிகரீதியான வெற்றி வாரிசு திரைப்படத்திற்கு தான் என்றும், புள்ளி அளவிலேயே வித்தியாசங்கள் இருந்தாலும் முதலிடம் என்பது வாரிசு படத்திற்கு தான் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read: மகேஷ்பாபுவை அட்ட காப்பியடித்த விஜய்.. வம்சியை இங்க மட்டும் இல்ல அங்கயும் வச்சு செய்றாங்களாம்

- Advertisement -