ராஜ வாழ்க்கையை நாசமாக்கிய நட்சத்திர கிரிக்கெட்டர்.. உண்மையை அம்பலமாக்கிய ரவி சாஸ்திரி

Ravi Shastri: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீப காலமாக கொடுக்கும் பேட்டிகள் பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது. இந்திய அணி மற்றும் வீரர்களின் யுக்தி மற்றும் சாதகமான நிலைமை என அனைத்தையும் புட்டு புட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் உலக கிரிக்கெட் அணிகளின் பார்வையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிளேயரை பற்றி அவர் பேசிய விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் முடிந்த கையோடு t20 போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக யார் வரவேண்டும் என்ற பேச்சு வார்த்தை சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது. இந்திய அணியின் மூத்த வீரர்களை எல்லாம் அனுப்பிவிட்டு இளம் வீரர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்த, ரவி சாஸ்திரி டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கலாம், ஆனால் அதற்கு முன் அவர் அவருடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர். எல்லா விதமான போட்டிகளிலும் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை நிரூபித்து வரும் இவர் குஜராத் டைட்டன் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவருடைய தம்பி குருனால் பாண்டியாவும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார். இவர்கள் இருவருமே ரொம்பவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து கிரிக்கெட்டுக்கு வந்தவர்கள்.

Also Read:IPL 2024 சிஎஸ்கே டாப் 5 வீரர்களின் சம்பள விவரம்.. தோனியை மிஞ்சி சம்பளம் வாங்கும் அந்த வீரர்

அண்ணன் தம்பி ரெண்டு பேருமே கிரிக்கெட் விளையாடி தான் அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மேலே கொண்டு வந்தார்கள். உங்களுடைய சொந்த உழைப்பால் இப்பொழுது கோடீஸ்வரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பங்களா, பிளாட், சொகுசு கார்கள் என அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் ராஜ வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள்.

ஹர்திக் பாண்டியா பிரபல நடிகை மற்றும் நடன கலைஞரான நடாஷாவை திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய வாட்ச் விலை கோடி கணக்கில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படி கடுமையான உழைப்பின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஹர்திக் பாண்டியா பிட்னஸில் கவனம் செலுத்தவில்லை என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டு அவர் மீது எழுந்திருக்கிறது.

t20 போட்டிகளுக்கு கேப்டன் ஆகும் தகுதி உடைய ஹர்திக் பாண்டியா பிட்னஸில் கவனம் செலுத்தாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. கடின உழைப்பால் மேலே வந்த அவர், தற்போது பழைய நிலைமைக்கு வராவிட்டால் அனைத்தையும் இழக்க நேரிடும். இது தெரிந்து மீண்டும் ஹர்திக் பாண்டியா ஃபார்முக்கு வர வேண்டும்.

Also Read:2024 ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் விபரம்.. 2 புதுமுக ஆல்ரவுண்டர்களை வளைத்த தல தோனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்