21 ஆண்டிற்கு முன்பே தளபதியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ரவி மரியா.. வில்லனை தாண்டி இவர் இயக்கிய 2 படங்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரவி மரியா. இவரது நடிப்பில் வெளியான மாயாண்டி குடும்பத்தார், பழனி மற்றும் கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

ரவி மரியா மற்றும் வசந்தபாலன் இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வசந்தபாலன் இயக்கும் படங்களில் ரவி மரியாவை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வந்துள்ளார்.

அதன் விளைவாக தான் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் தனது நண்பரான ரவி மரியாவை வில்லனாக அறிமுகப்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ரவி மரியாவிற்கு அடுத்தடுத்து குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அதன் மூலம்தான் அங்காடித் தெரு போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது ஜெய் ஜெய் படத்தை இயக்கி வரும் வசந்தபாலனின் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி மற்றும் நியூ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு தான் ஆசாய் ஆசாயாய் மற்றும் மிளகா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய படங்கள் வெற்றி கண்டதை விட இவர் நடிப்பில் வெளியான மாயாண்டி குடும்பத்தார், பழனி மற்றும் கோரிப்பாளையம் போன்ற படங்களில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். எழில் இயக்கிய அனைத்து படங்களிலும் காமெடி கலந்து வில்லனாக நடித்திருப்பார்.

ரவி மரியாவின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றியவர்கள் இரண்டே பேர்தான். ரவி மரியாவின் நெருங்கிய நண்பரான வசந்தபாலன் மற்றொரு நபர் எழில் என்பதை அவரே பலமுறை பெருமையாக கூறியுள்ளார்.

ravi mariya
ravi mariya

2000 ஆம் ஆண்டு குஷி படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய ரவி மரியா அதே படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த காட்சியில் ஜோதிகாவை பார்த்து கோயிலில் அவர் ஜொள்ளு விடுவது போல் இயக்குனர் எஸ் ஜே சூர்யா அமைத்திருப்பார். இந்த காட்சியின் மூலம் தான் முதன் முதலாக இவர் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்