பிக்பாஸில் கணவரை பற்றி வாய் திறக்காத ரக்ஷிதா.. பிரிவுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 தற்போது 21 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்ட், ஒரு டாஸ்க் வைத்து அதன் மூலம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகிறார்கள் என்பதை தீர்மானிக்கின்றனர்.

அதாவது 21 போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் நடந்த கதையை பிற போட்டியாளர்கள் இடம் சொல்ல வேண்டும். அப்போது செல்லும் போது இடையில் தடங்கலாக 3 பல்சரை பிற போட்டியாளர்கள் அடித்தால், அவர்கள் சொல்லும் கதையை நிறுத்தி விடவேண்டும். யார் முழுமையாக கதை சொல்கிறார்களோ அவர்கள் இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும்.

இப்படிப்பட்ட டாஸ்க்கில் சீரியல் நடிகை ரச்சிதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதையை பிற போட்டியாளர்களுடன் பகிர்கிறார். ஆனால் அவர் தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் சினிமா கேரியரை பற்றி மட்டுமே பேசுகிறார். அவருடைய கணவர் சீரியல்நடிகர் தினேஷை பற்றி வாய் திறக்கவில்லை.

Also Read : விஜய் டிவிக்கே ஷட்டரா? ரச்சிதாவை கொக்கி போட்டு தூக்கிய பிரபல சேனல்

ஏனென்றால் தினேஷ்-ரச்சிதா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பார்கள் போல தெரிகிறது. இவர்கள் இருவரின் பிரிவுக்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்களிடம் தன்னுடைய கணவர் தினேஷை பற்றி மனம் திறந்த பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதையில் கூட தினேஷை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு சில போட்டியாளர்கள் இடம் தனது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்ட தினேஷ் இருவரும் சில சீரியல்களில் ஜோடியாகவும் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் ஃபேமஸானவர்கள்.

Also Read : விஜய் டிவியை விட்டு வெளியேறும் சரவணன் மீனாட்சி ரச்சிதா.. காரணம் கேட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது பலருக்கு சந்தோஷத்தை அளித்தது. ஆனால் திருமணம் முடிந்த பிறகு ரச்சிதா சம்பாதிக்கும் பணத்தை அவரின் அப்பா அம்மாவிற்கு கொடுக்கக்கூடாது என தினேஷ் பிரச்சினை செய்திருக்கிறார்.

இதனால் ரச்சிதா பெரும் மன உளைச்சலை சந்தித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தினேஷை விட்டு தனியாக வாழும் முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது ரச்சிதாவுக்கு தினேஷ் ‘தன்னுடைய வாழ்த்துக்களையும், வெற்றியுடன் திரும்பி வா’ என்றும் சோஷியல் மீடியாவில் மனைவிக்காக காத்திருப்பது போல் கருத்துப்பதிவிட்டிருந்தார்.

Also Read : லெகின்ஸ் மற்றும் சட்டையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட ரச்சிதா.!

அதே சமயம் வனிதாவின் முன்னாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருக்கும் நிலையில், அவர் ரச்சிதாவுக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னிலையில் ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய மனதில் மாற்றம் ஏற்பட்டு தினேஷை ஏற்றுக்கொள்வாரா அல்லது ராபர்ட் மாஸ்டர் வலையில் சிக்குவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -