ஓவர் மெதப்பில் இருக்கும் ராஷ்மிகா.. அடிச்சு துரத்திய பிரம்மாண்ட இயக்குனர்

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துணிவு படத்துடன் ரிலீஸாகவுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இருந்தாலும் படத்தை முழுதாகா பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

குடும்ப பாங்கான கதை என்பதால் இப்படத்தில் விஜய்க்கு ஆக்ஷன் காட்சிகள் கம்மியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒன்றாக இயக்கப்பட்ட இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வாரிசுடு என்ற டைட்டிலுடன் அண்மையில் வெளியாகி வைரலானது. மேலும் இப்படம் தெலுங்கு பட பாணியில் படம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அம்பலமானது விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா ரகசிய உறவு.. போட்டோவால் ஷாக்கான குடும்பம்

இதனிடையே இப்படத்தின் கதாநாயகியாக முதன் முதலில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். மேலும் ராஷ்மிகா சமுக வலை தளத்தில் அப்லோட் செய்யப்படும் புகைப்படங்களை பார்ப்பதற்கே ரசிகர்கள் ஏராளம் எனலாம். அந்த கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வைத்தே கோடி கணக்கில் ராஷ்மிகா சம்பாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா விஜயுடன் நடித்த பின் அவரது மார்க்கெட் சற்று எகிறியுள்ளதால் சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றியுள்ளார். ஒரு படத்திற்கு 1 கோடியிலிருந்து 2 கோடி வரை வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது மூன்றிலிருந்து 5 கோடி வரை கேட்டு வருகிறாராம். இதன் காரணமாக பிராம்மண்ட இயக்குனரிடம் மொக்கை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: ஓவர் கெத்து காட்டிய ராஷ்மிகா.. கண்டுக்காமல் நோஸ்கட் செய்த காந்தாரா இயக்குனர்

தெலுங்கு நடிகர் ராம்சரணின் ஆர்.சி 15 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 170 கோடி ரூபாய் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ராஷ்மிகாவை ஷங்கர் அணுகியுள்ளார். படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்ன ராஷ்மிகா தன் சம்பளத்தை 3 கோடி வரை கேட்டுள்ளாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷங்கர், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கியாரவிற்கே 4 கோடி தான் சம்பளமாம். ஆனால் ராஷ்மிகா தென்னிந்தியாவில் மட்டுமே படங்கள் பண்ணிவிட்டு பாலிவுட் நாயகி ரேஞ்சிற்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டது ஷங்கருக்கு கோபத்தையே வரவழைத்தாம். உடனே ரஷ்மிகாவை ஓரங்கட்டிவிட்டு , இயக்குனர் ஷங்கர் வேறு நடிகையை தேர்ந்தெடுக்க சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:ஷங்கர் போல் சம்பளம் வாங்கினால் மட்டும் போதாது கண்ணியமும் வேண்டும்.. அட்லியின் சிறுபிள்ளை ஆட்டிட்யூட்

- Advertisement -spot_img

Trending News