கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தண்ணா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இரண்டு வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் 2018 ஆம் ஆண்டு ரிலீசான ‘கீத கோவிந்தம்’ திரைப்படத்தின் மூலமே இவர் பிரபலமானார். இந்த படம் மற்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆனதால் இந்திய சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆனார்.

இவர் தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படு பிசியாக இருக்கிறார். ராஷ்மிகாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்ததோ, அந்த அளவுக்கு ட்ரோல்களும் அதிகமாக விட்டது. இவரையம் விஜய் தேவரகொண்டாவையும் வைத்து நிறைய வதந்திகளும் பரவ தொடங்கி விட்டன. இவற்றிற்கெல்லாம் பதில் கூறும் விதமாக ராஷ்மிகா சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

Also Read: மொட்டைத் தலையுடன் ஜிமிக்கி போட்டு ஸ்டைலாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் மீம்ஸ்

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த சில நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்கள் அல்லது பல ஆண்டுகளாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்து வருகின்றன, நான் அதை பற்றி சொல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். இதை நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன் . இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்.”

“நான் இந்த சினிமா வாழ்க்கையை தொடங்கியதில் இருந்தே நிறைய வெறுப்புகளை சம்பாதித்து இருக்கிறேன். என்னை நிறைய ட்ரோல் செய்கிறார்கள், எனக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக எவ்வளவு உழைக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டுமே நான் வரவேற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: குட்டை பாவாடையில் கால்மேல் கால்போட்டு கில்மா போஸ் கொடுத்த ராஷ்மிகா.. சூடான இணையதளம்!

ராஷ்மிகா முதலில் இளைஞர்களால் அதிகம் விரும்பப்பட்ட கதாநாயகியாக இருந்தார். பின்னர் கியூட் என நினைத்து அவர் கொடுக்கும் ரியாக்சன்கள்,பொதுவெளிகளில் செய்யும் சில சேட்டைகளால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். இவரை கலாய்த்து நிறைய மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் பரவி கிடக்கின்றன. சமீபத்தில் இவர் விஜயுடன் எடுத்த செல்பிக்கள் விஜய் ரசிகர்களாலேயே ட்ரோல் ஆனது.

இந்நிலையில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த போதே அவருடன் இணைத்து பேசப்பட்டார். இப்போது இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர், மும்பையில் டேட் செய்து வருகின்றனர் என்று தகவல்கள் அதிகமாக பரவுவதால் இப்படி ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.

Also Read: ஷங்கருக்காக காத்திருக்கும் 25 வயது நடிகை.. போனாப் போகுது, அந்த பட வாய்ப்பை கொடுத்துருங்க சார்!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை